அக்டோபர் 2 முதல் பிபிசி உலக சேவை
இந்தியாவில் செய்துள்ள விரிவாக்கத்துக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். "இந்தியாவில் பிபிசி உலக சேவையின் விரிவாக்கம் மற்றும் குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு ஆகிய இந்திய மொழிகளில் புதிதாக பிபிசி சேவைகள் தொடக்கம் ஆகியவை குறித்து அறிந்து மகிழ்ந்தேன்," என்று அவர் கூறியுள்ளார். "பத்திரிகை சுதந்திரம் தொடர் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ள அதே சமயம் பணத்துக்கு செய்தி வெளியிடும்போக்கு இதழியல் நம்பகத்தன்மை சந்தேகத்தோடு நோக்கப்படும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ள நிலையில், நாட்டின் வரலாற்றில் நாம் ஒரு சவாலான காலத்தில் இருக்கிறோம். இந் நிலையில் சுதந்திரம், நம்பகத்தன்மையில் தடம்பதித்த பிபிசி பெரிய அளவில் தமது சேவையை இந்தியாவில் விரிவாக்கம் செய்வது நம்பிக்கை தருவதாக உள்ளது," என்றும் கூறியுள்ளார். "தற்போது புதிதாகத் தொடக்கப்பட்டுள்ள நான்கு மொழிச் சேவைகளோடு, இந்தியாவில் பேசப்படும் 8 மொழிகளில் தற்போது பிபிசி சேவை கிடைக்கும் என்பது மன நிறைவளிக்கிறது." "இதனால் பலகோடி இந்தியக் குடிமக்கள் இன்னும் நல்ல முறையில் செய்திகளைத் தெரிந்து கொள்வார்கள் என உறுதியாக நம்புகிறேன்" என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக