சனி, 7 அக்டோபர், 2017

திமுகவின் ஒரு வெறும் பிளேன் டீ தொண்டன்

சாய் லட்சுமிகாந்த் :இந்த கட்சி, தலைவர்களால் ஆனது அல்ல.. இப்படிப்பட்ட தொண்டனால் ஆனது.. ...  ஒரு 66 வயது, கூலி வேலைக்கு தான் போகிறார். சாப்பாட்டுக்கே கஷ்டப்படுற சூழ்நிலை.
ஒரு வாரத்துக்கு முன்னாடி வந்து உறுப்பினர் சேர்க்கை படிவம் கேட்டார்.
உனக்கு எதுக்கு பெருசு படிவம்
வயசான காலத்துல நீ ஏன் கஷ்டப்படுற,
நான் பாத்துக்குறேன் நீ போனு சொன்னேன்.
அதெல்லாம் முடியாது எனக்கு குடுங்கனு சொன்னார்.
சரி இந்தாங்க அப்படினு குடுத்தேன். ( 25 உறுப்பினர்களை சேர்ப்பது மட்டுமல்லாமல் அவர்களது ஓட்டர் கார்டையும் ஜெராக்ஸ் எடுத்து தர வேண்டும், எனவே கண்டிப்பாக இவரால் முடியாது என்ற நினைத்து தான் குடுத்தேன்).
இன்னைக்கு உறுப்பினர் படிவத்தை திரும்ப எடுத்து வந்தார்.
25 உறுப்பினரை சேர்த்து அவர்களது ஓட்டர் கார்டை வாங்கி அதையும் ஜெராக்ஸ் எடுத்து கொண்டு வந்திருந்தார்.


உறுப்பினர் கார்டுக்கு தனது சொந்த பணம் 500 ரூபாய் குடுத்தார்.
எனக்கு எனக்கு என்ன சொல்றதுனே தெரியல.
காசு மட்டும் வேண்டாம்னு சொல்லிட்டு படிவத்தை வாங்கிட்டேன்.
அவர் பெயர் மட்டுமல்ல செயலிலும் வீரன் தான்.

சொந்த காசில் ஒரு வெறும் பிளேன்டீயைகுடித்துவிட்டு  பகுத்தறிவு  சுயமரியாதைகொள்கைகளை  புழுதி படிந்த சின்னஞ் சிறு தெருக்களுக்கும் அங்குள்ள  குடிசைகளுக்கும்  எடுத்து செல்லும் இந்த வீரன் போன்ற தொண்டர்கள்தான் உண்மையான திராவிட முன்னேற்ற கழகம் !

கருத்துகள் இல்லை: