Sivasankaran Saravanan :
தான் ஒன்றும் பொருளாதார நிபுணர் இல்லை என்று முதன்முறையாக மனம் திறந்துள்ளார் பிரதமர் மோடி.
உண்மை தான். இதைத்தானே நாங்கள் ஆரம்பம் முதலே சொல்லி வருகிறோம்? ஆட்சிக்கு வருகிற எல்லா பிரதமர்களுமே பொருளாதார நிபுணராக இருக்கவேண்டிய அவசியமில்லை அது முடியவும் முடியாது. அதற்குத்தான் பிரதமருக்கான நிதி ஆலோசனை அமைப்பான Economic Advisory Council (EAC) என்ற அமைப்பு செயல்பட்டுவந்தது. மோடி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக அந்த EAC யை ஊத்தி மூடிவிட்டு இப்போது தோல்விகளுக்கு பிறகு வெட்கமே இல்லாமல் Economic Advisory Council திரும்ப அமைக்கப்படும் என்கிறார்.
அதைக்கூட தான் தான் அந்த அமைப்புக்கு சங்கு ஊதியவர் என்பதை கூட கமுக்கமாக மறைத்துவிட்டு என்னவோ இவர் மனதில் உதித்த ஐடியா போல வெறுமனே Economic Advisory Council அமைக்கப்படும் என அறிவிக்கிறார்.
தினமலர் :புதுடில்லி: ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை
மேம்படுத்துவதே இந்த அரசின் லட்சியம் என பிரதமர் மோடி பேசினார்.
இந்திய கம்பெனி செயலாளர்கள் மையத்தின் 50வது ஆண்டு பொன்விழாவை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்து பேசினார்.அப்போது அவர் பேசியது உங்களுடைய கடின உழைப்பும் அதற்காக நீங்கள் ஈட்டும் வருவாயின் மதிப்பினை இந்த அரசு நன்கு புரிந்து கொள்கிறது, இந்த அரசின் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மிகுந்த கவனம் செலுத்துவதே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வை மேம்படுத்துவதில் தான். ஒரு பெரிய மாற்றத்தின் நேரம் இது. நேர்மையான, வெளிப்படையான ஆட்சியின் முக்கியத்துவம் உணரப்பட்டுள்ளது.
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் 6 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தி திறன் வெறும் 5.7 சதவீதம் தான் இருந்தது. கடந்த மூன்றாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதம் இருந்த பின்னர், கடந்த ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் வளர்ச்சியில் சரிவு ஏற்பட்டதை ஏற்றுக்கொள்கிறோம். இருப்பினும் வரும் காலாண்டில் 7.7 சதவீத வளர்ச்சி பெறும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
கார் விற்பனை, விமான போக்குவரத்து, விமான சரக்கு சேவை, மற்றும் தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது: வளர்ச்சியில் இந்தியா புதிய உச்சத்தை எட்ட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசு மேற்கொண்டுவருகிறது என உறுதியளிக்கிறேன். ஜி.எஸ்.டி. வரியால் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த பரிந்துரைகளின் படி மாற்றங்களை கொண்டு வர தயாராக உள்ளோம். இவ்வாறு மோடி பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக