Siva Oneindia Tamil லாஸ் வேகாஸ்: லாஸ் வேகாஸில் நடந்த இசை நிகழ்ச்சியில் 58 பேரை சுட்டுக் கொன்ற ஸ்டீபன் பாடக் குற்றப் பின்னணி இல்லாத முன்னாள் கணக்காளர் மற்றும் விமானி ஆவார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியின்போது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 58 பேர் பலியாகினர், சுமார் 500 பேர் காயம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர் மெஸ்கிட் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் க்ரெய்க் பாடக்(64) என்பது தெரிய வந்துள்ளது. ஸ்டீபன் ஸ்டீபன் மண்டாலே ஹோட்டலில் உள்ள 32வது மாடியில் இருக்கும் தனது அறையில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த அறையில் இருந்தபடியே தான் அவர் இசை நிகழ்ச்சியில் இருந்த கூட்டத்தை நோக்கி சுட்டார். அவரது அறையில் பல ஆயுதங்கள், பத்திரிகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெண் பெண் ஸ்டீபன் தாக்குதல் நடத்த சில மணிநேரங்களுக்கு முன்பு மரிலூ டான்லி என்ற பெண்ணுடன் வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். கணக்காளர் கணக்காளர் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து 80 மைல் தொலைவில் உள்ள மெஸ்கிட் பகுதியில் வசித்து வந்துள்ளார் ஸ்டீபன்.
முன்னாள் கணக்காளரான அவர் பைலட் உரிமமும் வைத்திரிந்திருக்கிறார். அவருக்கு எந்த குற்றப் பின்னணியும் இல்லை. வியப்பு வியப்பு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்த ஸ்டீபன் ஏன் இப்படி செய்தார் என்று அவரது குடும்பத்தார் வியப்பில் உள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக