tamil.oneindia.com: என்னதான் கணவர் நடராஜனைப் பார்க்க பரோலில் சசிகலா வெளியே
வந்திருந்தாலும் அதிமுகவில் இழந்து போன பிடியை இறுக்கிக் கொள்ளவும்
தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ள தினகரனை ஓரம்கட்டவும் இந்த வாய்ப்பை
பயன்படுத்த திட்டமிட்டிருப்பதாகவே கூறப்படுகிறது. சசிகலா கணவர் நடராஜனின் இரண்டு சிறுநீரகமும் கல்லீரலும் நன்றாகச் செயல்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர்.
‘ சிறுநீரகம் பழுதான நேரத்திலேயே அதற்கான சிகிச்சையை எடுக்காமல் ரகசியம் காத்ததன் விளைவை தற்போது அனுபவிக்கிறார்.
சசிகலாவைப் பொறுத்தவரையில், கணவரைப் பார்ப்பதைவிடவும் கட்சியைக் காப்பதற்காகவே பரோலில் வந்திருக்கிறார் என்கின்றனர் அவரது உறவினர்கள். தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்து உறவினர்களைச் சந்திக்க இருக்கிறார் சசிகலா.
அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்றும் அதே தி.நகர் வீடு 2011ம் ஆண்டு போயஸ் கார்டனை விட்டு சசிகலா துரத்தப்பட்டபோது, அவர் அடைக்கலமானது கிருஷ்ணப்பிரியா வீட்டில்தான். வேறு எங்கும் போகக் கூடாது. பிரியா வீட்டில் மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இன்று பரோலில் வரும் சசிகலா, அடுத்த 5 நாட்கள் கிருஷ்ணபிரியா வீட்டில்தான் தங்கப் போகிறார்.
ஜெ. மறைவுக்கு பின்னும் தனியே சசி
இதுகுறித்து நம்மிடம் பேசும் சசிகலா உறவினர்கள், கணவர் நடராஜனுக்காக சசிகலா பரோல் கேட்டாலும், உண்மையில் கட்சியில் தன்னுடைய பிடியை உறுதிப்படுத்திக் கொள்வதற்காகவே அவர் வெளியில் வருகிறார்.
‘அக்கா இருக்கும்போது என்ன நிலை இருந்ததோ, அதுவே தொடரட்டும். கணவரை சந்திக்க விரும்பவில்லை என்றுதான் ஜெயலலிதா இறந்த நாட்களில் பேசி வந்தார் சசிகலா.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றபோது, அவரைச் சந்திக்கச் சென்றார் நடராஜன்.
அதன்பிறகு எந்தச் சூழ்நிலையிலும் சசிகலாவை அவர் சந்திக்கவில்லை.
கணவரை விட கட்சி முக்கியம்
இந்நிலையில், கல்லீரல், சிறுநீரக செயலிழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டார் நடராஜன். இதனையடுத்து, உடனடியாக அவரை வந்து சந்திக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத்தபோது, சிறைத்துறையின் அனுமதி கிடைக்கவில்லை. தமிழக அரசும் பரோல் கொடுப்பதற்கு முட்டுக்கட்டை போட்டது.
இப்போது ஒருவழியாக பரோல் கிடைத்துவிட்டது.
கணவரை சந்திப்பதைவிடவும் கட்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக சில திட்டங்களை வைத்திருக்கிறார் சசிகலா. தினகரனை ஓரம் கட்டுகிறார் குறிப்பாக தனிக்கட்சி தொடங்க தினகரன் திட்டமிட்டுள்ளதால் கடும் கோபத்தில் இருக்கிறாராம் சசிகலா.
முதலில் அவரை ஓரம்கட்டி கட்சியை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர விரும்புகிறாராம் சசிகலா.
எல்லாமே தினகரனால் அதுவும் என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வராமல் தன்னிச்சையாகவே தினகரன் எடுத்த முடிவுகளால்தான், இப்படியொரு வீழ்ச்சி ஏற்பட்டது.
இனி எந்தப் பிரச்னை என்றாலும் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம் என்பதை இந்தப் பரோல் காலத்தில் ஆதரவாளர்களிடம் தெரிவிக்க இருக்கிறாராம் சசிகலா.
அமைச்சர்கள் வருவார்கள் தன் மீது உள்ள பாசத்தில் அமைச்சர்களும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தன்னை வந்து சந்திப்பார்கள் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.
குடும்ப ஆட்களின் தலையீடு குறித்து, மூத்த நிர்வாகி ஒருவர் சசிகலாவிடம் எடுத்துக் கூறியிருக்கிறார்.
இதற்குப் பதில் அளித்தவர், ‘ நீங்களே நன்றாக கவனித்துப் பாருங்கள்.
என் குடும்ப ஆட்களை நான் பெரிதாக வளர்த்துவிடவில்லை. கொங்கு மண்டலத்தில் கோலோச்சிய ராவணனை, அக்கா நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே ஓரம்கட்டிவிட்டேன்.
என் குடும்பத்திடம், அக்கா பாசம் காட்டிய நாட்களிலேயே தினகரனைத் தவிர வேறு யாருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவரால் எந்தவிதச் சிக்கலும் வராது. நிலைமையை அனுசரித்துச் செல்லக் கூடியவர் என்றுதான் வளர்த்துவிட்டேன்.
அதன் விளைவை இப்போது அனுபவிக்கிறேன்.
ஒழிக்க முயற்சிக்கிறார்களா? முப்பது ஆண்டுகளாக அக்கா பக்கத்தில் இருந்தே கட்சியின் வளர்ச்சியைப் பார்த்து வந்தவள் நான். என்னை ஒழித்துவிட்டால் அ.தி.மு.கவை வீழ்த்திவிடலாம் என சிலர் கணக்கு போடுகிறார்கள். அதற்கு நான் இடம் கொடுக்க மாட்டேன்.
இனி எந்தப் பிரச்னை என்றாலும் என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வாருங்கள் எனக் கூறியிருக்கிறார்.
பரோல் முடிவதற்குள் கட்சி நிர்வாகிகளை ஒன்றிணைத்துவிட வேண்டும்; தினகரனை ஓரம் கட்டிவிட வேண்ட்டும் என எண்ணுகிறாராம் சசிகலா.
ஆனால், அதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக