tamilthehindu : அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா. நாங்கள் நன்றி மறக்க
மாட்டோம் என்று மதுரையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ
கூறினார்.
மதுரை தல்லாகுளம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை, ரோட்டரி சங்கம் சார்பில், சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தொடங்கி வைத்தார். < அதற்குப் பிறகு அவர் பேசுகையில், ''அதிமுக ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தவர் சசிகலா. நாங்கள் நன்றி மறக்க மாட்டோம். அதில் எவ்வித மாற்றுக்கருத்து ஏதுமில்லை. நான் அக்கருத்தை மாற்றிக்கொள்பவனும் இல்லை.
தனிப்பட்ட முறையில் அனைத்து கருத்துகளையும் கூறலாம். ஆனால் அமைச்சராக மனதில் உள்ளவற்றை கூற முடியாது. இன்றைய சூழலில் சசிகலா குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாமல் இருக்கிறேன். கருத்து வேறுபாடுகள், வருத்தங்கள் இருந்தாலும், தற்போது வெளிப்படுத்த முடியாமல் அனைத்தையும் அடக்கி கொண்டுள்ளேன். முதல்வர், துணை முதல்வருக்கு பாதகமாக எனது கருத்து அமைந்து விடக்கூடாது.
அதிமுகக்கு ஒரே எதிரியாக இருக்கும் திமுகவின் வலுவை எதிர்ப்பதே எங்களது பணி. டெங்குவை விட மோசமானது திமுக. அதன் ஆட்சி தமிழகத்தில் வராதபடி சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்'' என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக