புதன், 11 அக்டோபர், 2017

ஈழத்தமிழர்களிடமும் பெரியாரின் தாக்கம் உண்டு .. ஜாதிபெயர்கள் கிடையாது


பெயர்களில் உள்ள ஜாதி  குறியீடுகளை தமிழகத்தில் மட்டுமல்லாது  கடல் கடந்தது    ஈழத்தமிழர்களின் பெயர்களிலும் இருந்த ஜாதி  பெயர்களை அறவே ஒழித்து விட்டது என்பது வியப்புக்கு உரிய செய்திதான்!
அங்குள்ள எந்த அரசியல் கட்சியும் பெயர்களில் இருந்த ஜாதி குறியீடுகளை ஒழிக்க வேண்டும் என்றுஎந்த   காலத்திலும் பேசியதாக   தெரியவில்ல.
ஆனால் அந்த மக்கள் தங்கள்  ஜாதி குறியீடுகளை பாவிப்பதில்லை.
பெரியாரின் கருத்துக்கள் அங்கு தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.   
தமிழக திரைப்படங்கள் பாடல்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் மூலம் தமிழகத்தை பற்றிய அறிவு இலங்கை தமிழர்களுக்கு ஓரளவு இருந்திருக்கிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு இலங்கை தமிழர் பற்றி யுத்ததிற்கு முன்பு வரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை.
சிங்களவர்கள் தமிழர்களை தாக்குகிறார்கள் என்றது தமிழகம் துடித்து எழுந்தது வரலாற்று உண்மை.
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் எம்மவரே என்று கொதித்து எழுந்த  தமிழகத்துக்கு யாழ் மையவாதிகள் பற்றி தெரிந்திருக்கவில்லை.
தமிழ் தேசியவாதிகளான புலிகளுக்கு திராவிட பகுத்தறிவு சுயமரியாதை போன்ற சொற்களே வேப்பங்காயாக கசந்ததில் வியப்பில்லை .
 கம்யுனிசம் என்றால் பிறவி எதிரிதான் .அதைவிட மோசமான எதிரியாக திராவிட கோட்பாட்டை வெறுத்தார்கள் . அதற்கு முக்கயமான ஒரு காரணமாக சாதி மறுப்பு என்று மட்டும் கூறிவிடமுடியாது ,
பார்ப்பனீயத்தின் அசல் வாரிசுகளாக யாழ்மையவாதிகள் இருக்கிறார்கள்.
பெரியாரின் தாக்கம் ஈழத்திலும் இருந்திருக்கிறது.
பராசக்தி படமும் அதன் வழி ஒட்டி வந்த ஏராளமான திரைப்படங்கள் சுயமரியாதை கருத்துக்களை ஓரளவு மக்கள் மனதில் விதைத்திருந்தன.
இவற்றின் காரணமாக சாதி பெயர்களை மக்கள் பயன்படுத்துவதில்லை. அது அநாகரீகம் என்ற கருத்தை ஈழத்தில் பதித்தது நிச்சயமாக திராவிட இயக்கங்கள்தான். இன்று பலரும் மறந்து விட்ட வரலாற்று உண்மை இதுவாகும்.
திரைப்படங்கள் மாத்திரம் அல்லாது தமிழக பத்திரிகைகளும்  திராவிட கருத்துக்களை ஓங்கி ஒலித்தமையையும் கருத்தில் கொள்ளத்தக்கது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் சமுக அரசியல் களத்தில் வேகமாக எழுச்சி பெற்று கொண்டு வந்த நிகழ்வுகளை  சிங்கள ஆட்சியாளர்கள் அதை மிகுந்த சந்தேகத்துடனும் கொஞ்சம் திகிலுடனும் நோக்கினர்,

சிங்களர்களின் கவனத்தை  திமுக கவர தொடங்கியது தமிழ் தலைவர்களுக்கு ஒரு நம்பிகையை கொடுத்தது . ஈழத்தமிழர்களின் பாதுகாப்புக்கு திமுகவின் பக்கக் பலம் தேவை என்ற எண்ணம் உருவானது.

 சிங்கள மேல்மட்ட சமுகத்திற்கு திமுக மீது ஒரு திகைப்பு உருவானபோது அதுவே தமது பலம் என்ற எண்ணம் இலங்கை தமிழ் தலைவர்களுக்கு உருவானது.
பலம் பொருந்திய  பலம் பொருந்திய சிங்கள தலைமைக்கு ஒரு மறைமுக செய்தியாக திமுக தலைவர்களோடு தங்கள் உறவை  மேம்படுத்தும் முயற்சியில் ஈடு பட்டார்கள் .
இலங்கை தமிழரசு கட்சி கூட்டங்களில் பட்டிதொட்டி எல்லாம் "எங்கள் திராவிட பொன்னாடே கலை வாழும் தென்னாடு"  என்ற பாடலே ஒலித்தது.
பராசக்தி வசனங்களே அன்றைய ஈழத்தமிழ் இளைஞர்களின் ஒரே வசனமாக இருந்தது .

1968 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு நிகழ்சிகளை  ஒவ்வொரு ஈழத்தமிழரும்  தங்கள் வீட்டு நிகழ்ச்சியாக எண்ணி அன்றாடம் பேசிய நிகழ்வுகள் எல்லாம் ஒரு வரலாற்று பதிவாகும் .
திராவிட முன்னேற்ற கழக தலைவர்களின் காலண்டர் படங்கள் பலரது வீடுகளையும் அலங்கரித்தது ,

சிகை அலங்கரிப்பு நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள் பெரியார் அண்ணா கலைஞர் எம்ஜியார் போன்றவர்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும் இடங்களாக இருந்தமை விரிவாக எழுதப்பட வேண்டிய ஒரு வரலாற்று பதிவாகும் .
இலங்கை தமிழ் தலைவர்களுக்கு திமுக மீது ஒரு ஒரு திரில் கலந்த மயக்கம் இருந்தது. பின்னாளில் வந்த வீரபாண்டிய கட்டபொம்மன்  திரைப்படம் கூட மக்களை ஒரு போருக்கு தயார் படுத்தியதாகவே வரலாறு அமைந்தது.  
அன்றைய தலைவர் செல்வநாயகம் அமிர்தலிங்கம் சிவசிதம்பரம் கதிரைவேற்பிள்ளை செனேட்டர் நடராசா போன்றவர்கள் தமிழகம் வந்து பெரியார் அண்ணா கலைஞர் நெடுஞ்செழியன் போன்றோரை சந்தித்து கருத்துக்களை பரிமாறினர்.
இந்த நிகழ்வுகளால் திராவிட முன்னேற்ற கழக தலைவர்களின் படங்கள்  இலங்கை தமிழர்களின் வீடுகளின் சுவர்களை அலங்கரிக்க தொடங்கினர் .
பின்பு மெதுவாக குறிப்பாக எம்ஜியாரின் அண்ணா திமுக உருவான பின்பு அதன் தாக்கமோ என்னமோ திராவிட கருத்தாக்கம் மெதுவாக குறையதொடங்கியது .. அந்த இடத்தை வெறும் சமய பிரசாரமும்தமிழ் தேசியமும் நிரப்ப தொடங்கியது .

இலங்கை தமிழர் பகுதிகளில் கண்ணுக்கு  தெரிந்த இடங்களில் எல்லாம் எதாவது ஒரு கோவில் இருந்தே தீரும்  இந்த கோவில் கலாச்சாரத்தை ஒட்டியே அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்களும் தங்கள் கலாச்சாரத்தை வளர்த்துக் கொண்டுள்ளன. அங்கு இந்துக்கள் மட்டும் அல்லாது கிறிஸ்தவர்களும் ஜாதியை பேணுவதில் தங்கள் ரோலை ஓரளவு முன்னிறுத்தியே வந்துள்ளார்கள்

யாழ்ப்பாண கலாச்சாரத்தை கந்தபுராண கலாசாரம் என்று சமுகத்தின் மேல் தட்டு மக்கள்  ( Jaffna Elites ) எப்பொழுதும் பெருமையோடு கூறுவர்.
இந்த யாழ் / கந்த புராண கலாசாரம் என்ற சொற்களில் குறிப்பிடப்படுவது உண்மையில் ஒரு ஜாதி கட்டமைப்பை இறுக்கமாக வைத்திருக்கும் தந்திரம்தான் இந்த கந்த புராண கலாச்சாரம் என்பது.

கருத்துகள் இல்லை: