செய்தியாக போட்டுவிட்டார்கள். இந்த குறுஞ்செய்தியின் பொருளை உள்வாங்கி புரிந்துகொண்டால் வரும் நாட்களில் உங்கள் சந்ததியர் எப்படிப்பட்ட கார்ப்பரேட் வலைப்பின்னலில் பிணைக்கப்படுவீர்கள் என்பது புரியும். கற்பனை வளமற்ற அடிமைகள் கடந்துசெல்லலாம்.
செய்தியின் சாராம்சம் இதுதான் :
ஆயுர்வேத கம்பெனி என்று வரிகட்டாமல் சலுகைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் பதஞ்சலி கம்பெனி ஆயத்த உணவு மற்றும் ஒப்பனை சந்தையை கைப்பற்றியபிறகு தற்போது நவீன மாட்டுத்தீவனத்தில் நுழைந்திருக்கிறது. நீங்கள் உபயோகிக்கும் அமுல் பால் பண்ணைகளுக்கு (மரபணு மாற்றப்பட்ட) அமெரிக்க சோளத்திலிருந்து Silage எனப்படும் ஒருவகை தீவனத்தை விற்க ஆர்டர் பிடித்திருக்கிறது. இது சோளத்தை செடியோடு காற்றில்லாமல் புழுங்கவைத்து எடுக்கப்படும் புளிக்கவைக்கப்பட்ட, அதிக ஈரப்பதம் இல்லாத சேமிக்கப்பட்ட தீவனமாகும். எந்திரங்களால் வைக்கோல் அமுக்கப்படும்போது அது எடைமிகுந்து, வெடிக்கும் நிலையில் ஆபத்தான வடிவத்தை பெறுகிறது.
இதற்காக அமெரிக்க தொழில்நுட்பத்தை இறக்குமதி செய்திருக்கிறது பதஞ்சலி.
ஏற்கனவே பிரேசிலிய எருதுகளின் விந்தணுவை செயற்கை கருவூட்டல் செய்ய
இறக்குமதிசெய்து அதில் ஆண் கருவை பிரித்து அழிக்கும் அமெரிக்க மற்றும்
டச்சு வல்லுநர்களிடமிருந்து தொழில்நுட்ப ஆதரவை பெற்றது இந்த கம்பெனி.
அதாவது பசு, பசு கன்றை மட்டும்தான் குட்டிபோடும். ஆண் கருக்கள்
அழிக்கப்படும்.
வெளியில் கோசாலை வைத்திருக்கிறோம், மாடுகளை கும்பிடுகிறோம், எங்களிடம் சுத்தமான நெய் வாங்குங்கள் என்று சொல்வார்கள். போலீஸ் அடிக்கு பயந்து முஸ்லீம் பர்தாவுக்குள் ஒளிந்துகொண்டு மேடையிலிருந்து குதித்து ஓடிய பாபாவின் இந்த வியாபார தந்திரம் உங்களுக்கு பிடித்ததுதானே !! அதுவல்ல முக்கியம். இனிமேல் உங்கள் செல்ல மழலைகள் பருகும் "அமுல்" பாலும் அமெரிக்க பால்தான் என்பதுதான் விசேடம். வியாபாரிகளின் பேராசைக்கு இணங்கும் உங்கள் குறை மதியால் ஒரு சந்ததியே பலியாகப்போகிறது.
உங்களைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. அதைவிட முக்கியம் வேறொன்று இருக்கிறது.
பதஞ்சலி கம்பெனி அமுல் பால் கம்பெனியின் சாபர்காந்தா என்ற பண்ணைக்கு ஆறுகோடி ரூபாய்க்கு (10,000 டன்) தீவனத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளது. இனி வரும் நாட்களில் நம் விவசாயிகளை அமெரிக்க தீவன சோளத்தை விதைக்க தூண்டுவார்கள். பதஞ்சலி அவற்றை பிழிந்து நாடுமுழுவதும் உங்கள் மாட்டுக்கு தீவனமாக அதை விற்கும். புற்களையும் வைக்கோலையும் மேயும் உங்கள் மாடுகள் நோஞ்சானாக சித்தரிக்கப்படும். தலைப்பாகை கட்டிய விவசாயிகளை ஆன்லைனில் பணம் பெறுவதுபோல பேச தொலைக்காட்சியில் காட்டுவார்கள் .
இதுவும் கொஞ்சநாள்தான். உங்கள் நிலம் பிடுங்கப்பட்டு கூட்டி பெருக்கப்படும். பிறகு ரொட்டிதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக