தினமலர் :சென்னை: தமிழக
கவர்னர், பன்வாரிலால் புரோஹித், மாநில அரசியல் நிலவரம் குறித்து,
ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தெரிவிப்ப தற்காக, நேற்று, டில்லி
புறப்பட்டுச் சென்றார். கவர்னரின் பயணம், அ.தி.மு.க.,வினரிடையே,
கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக அரசியலில், அசாதாரண சூழல்
நிலவு கிறது. இதை, திறம்பட கையாள வசதியாக, புதிய கவர்னராக,
பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அவர், அக்., 6ல், பதவி
ஏற்றார். பதவியேற்று மூன்று நாட்களே ஆகும் நிலையில், நேற்று
பிற்பகலில், டில்லி புறப்பட்டுச் சென்றார்.ஓரிரு நாட்கள் டில்லியில்
தங்கியிருந்து, ஜனாதிபதி,ராம்நாத்கோவிந்த், பிரதமர், மோடி, உள்துறை
அமைச்சர், ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார்.
அப்போது,
தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், எதிர்கட்சி தலைவர்கள்,
ஆளுங்கட்சி மீது தெரிவித்த புகார் பட்டியல், அவற்றின் மீதான
நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக
கூறப் படுகிறது.
இதனால், கவர்னரின் டில்லி பயணம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளிடையே, கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கவர்னரின் பயணம் குறித்து, ராஜ்பவன் வட்டாரங்கள் கூறியதாவது: டில்லியில், வரும், 12, 13ல் கவர்னர்கள் மாநாடு நடக்கிறது. ஜனாதிபதி தலைமையில் நடக்கும்மாநாட்டில், அனைத்து>
மாநில கவர்னர்களும் பங்கேற்கின்றனர். அதில் பங்கேற்கவே, தமிழக கவர்னர் சென்று உள்ளார். இருப்பினும், இன்று ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த்,மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.வரும்,11ல்,பிரதமர், மோடியை சந்திப்பார்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக