Lulu Deva Jamla : வடிவேலு
காமெடிங்கிறது, Charlie Chaplin comedy மாதிரி Slapstick or Physical
Comedy மட்டுமில்ல “comedy of manners”உம் கூட தான்னு சொல்லுவேன்.
அதாவது தன் உடல் மொழியால் (Body language) சிரிக்க வைக்கிறது மட்டுமில்ல, self insult செஞ்சுகிட்டு மத்தவங்கள சிரிக்க வைக்கிறது. தமிழ் சினிமாவில சந்திரபாபு முதல் சந்தானம் வரை மத்த லீட் காமெடியன்கள் எல்லாரும் அடுத்தவங்களை தாக்கி தான் சிரிக்க வைப்பாங்க. ஆனா வடிவேலு தன்னையே தாக்கிக்குவாரு. மத்தவங்களையும் நீக்கு போக்கு பாக்காம தன்னை தாக்க அனுமதிப்பாரு.
ஆனா நம்ம யாருக்குமே அவர் மேல பரிதாப உணர்ச்சியே வராது. சிரிப்பு தான் வரும். நாங்க திருப்பூர்ல வாழ்ந்தப்ப, வெற்றிக்கொடி கட்டு படம் தியேட்டர்ல வந்திருந்திச்சி. சன்னுவும் நானும் புது தம்பதிகள் அப்போ. சோடியா போனோம். திடீர்னு பார்த்திபனுக்கு பயந்து வடிவேலு பஸ்ஸ பிடிக்க துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடுற சீன்ல, அதான்பா அந்த ங்கோ... கெட்டவார்த்தைல ஒருத்தன் திட்டுவானே அதான்... அப்ப எங்களை சுத்தி இருந்தவுங்க எல்லாருமே வலது பக்கம் சுவர்ல தன் மண்டைய மோதி மோதி சிரிச்சுகிட்டு நின்ன ஒருத்தர பார்த்து சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. நானும் பக்கத்து சீட்ல இருந்த சன்னுவ ஏப்பா ஏப்பான்னு கூப்பிட்டா சத்தத்தையே காணோம். திரும்பி பார்த்தா ஆளயே காணோம். அப்பறம் தான் நா ரியலைஸ் பண்ணினேன், அங்க சுவத்துல முட்டிகிட்டு நின்னு கெக்கபிக்கேன்னு சிரிச்சுகிட்டு நின்னது எங்கூட்டுகாரரு தான்னு. மானம் போவுது. சீட்ல வந்து ஒக்காருங்கன்னு அவர புடிச்சிட்டு வந்து ஒக்கார வைக்கிறதுக்குள்ள எனக்கு தாவு தீர்ந்திரிச்சி. 😷😷😷 அந்தளவுக்கு வடிவேலு செண்டிமெண்ட் உண்டு என்னோட லைஃப்ல.
இப்பக்கூட பல வேளைகள்ள நம்ம பதிவுகள்ள வந்து எரிச்சல் மூட்டுற மாதிரி கமெண்ட் போடுறவுங்களுக்கு, கூலா இருந்திட்டு “ஆகாங்?” அப்டீன்னு ரிப்ளை குடுக்கிறப்போவெல்லாம் நானே என்னை ஒரு வடிவேலுவா கற்பனை பண்ணிகிட்டு அந்த மாடுலேஷன்ல தான் டைப் பண்ணவே செய்வேன். அந்தளவுக்கு நம்ம மனசுல ஒரு தாக்கத்தை உருவாக்கியிருக்கிற, காமெடின்னாவே வடிவேலுன்னு தான் அர்த்தம்னு தமிழ் சினிமாவில ஒரு புது அகராதியை உருவாக்கியிருக்கிற, நம்ம வைகை புயலுக்கு நேத்திக்கு (10/10/2017) பொறந்த நாளாமாம்.
ஒரு வாழ்த்த போட்டு வுட்டுட்டு தூங்க போறேன் மக்கழே ❤️❤️❤️
ஹேப்பி பெர்த்து டே டார்லிங் வடிவேலு 😁😁

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக