உ.பி., உத்தரகண்ட், டில்லி, பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாசுமதி பயிரிட அனுமதி
பரேலி:சுவை மற்றும் நறுமணத்தால், தனி இடம் பிடித்த, நம் நாட்டின், பாசுமதியை பயிரிட, ம.பி., தமிழகம் உள்ளிட்ட, 22 மாநிலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர், மஹாபாத்ரா கூறியதாவது: இந்திய பாசுமதி அரிசிக்கு, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன், டென்மார்க் மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தேவை அதிகமாக உள்ளது. 100 நாடுகளுக்கு, பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.சமீபகாலமாக, ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப் பட்டதாக பொய்யான பிரசாரத்தை பரப்புகிறார்கள் , இந்தி பேசாத மாநிலங்களின் பாசுமதி அரிசியின் தரம் பாதிக்கப்பட்டதாம் . . இதையடுத்து, பாசுமதி பயிரிட்டு வந்த, ஆந்திரா, மேற்கு வங்கம், அசாம், பீஹார், ஒடிசா, கேரளா, கர்நாடகா, குஜராத், தமிழகம், தெலுங்கானா உள்ளிட்ட, 22 மாநிலங்களில் பாசுமதி பயிரிட, இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சில் தடை விதித்துள்ளது. உ.பி., உத்தரகண்ட், டில்லி, பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே பாசுமதி பயிரிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கூறினார்.ஏஜென்சி செய்திகள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக