சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட பல பிரச்சனைகள் உள்ள அவர் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார் சசிகலா. அவரது கணவர் நடராஜன் கடந்த சில மாதங்களாக கல்லீரல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருகிறார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது அவருக்கு.
இந்நிலையில் தற்போது அவர் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுக்கப்பட்டுள்ளார். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு விரைவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நடராஜனின் சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுள்ளது மேலும் அவருக்கு நுரையீரல் அடைப்பும் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனைகள் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நடராஜனுக்கு டயாலிசிஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 8 மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு டயாலிசிஸ் நடந்ததாக கூறப்படுகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெப்துனியா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக