கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில்
ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து
அந்த ஓட்டலை பாரதீய ஜனதா இளைஞர் அணி தொண்டர்கள் சமீபத்தில் சூறையாடினர்.
இதற்கு எதிராக குறும்பட இயக்குனர் ராகுல் பசுபாலன் தலைமையில் ‘பேஸ் புக்’
சமூக வலைத்தள ஆர்வலர்கள் (சுதந்திர சிந்தனையாளர்கள்) போர்க்கொடி உயர்த்தி
உள்ளனர்.
ஓட்டல் சூறையாடப்பட்டதை கண்டித்து, கொச்சியில் மரைன் டிரைவ் மைதானத்தில்
வரும் 2–ந் தேதி ‘காதல் முத்தம்’ ( ‘கிஸ் ஆப் லவ்’) என்ற பெயரில் நூதன
போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதற்கு ‘பேஸ் புக்’கில் 20 ஆயிரம் பேர்
‘லைக்’ போட்டு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த போராட்டத்தின்போது ஒருவரை ஒருவர் அன்புடன் கட்டித்தழுவி, முத்தமிட
தீர்மானித்திருந்தனர். குறைந்தது 200 பேர் இதில் பங்கேற்பார்கள் என்று
எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தருமாறு கொச்சி போலீஸ் அதிகாரிகளை சந்தித்து ராகுல் பசுபாலன் மனு அளித்தார். ஆனால் இதற்கு அனுமதி தருவதில்லை என்று போலீஸ் முடிவு செய்திருப்பதாக கொச்சி துணை போலீஸ் கமிஷனர் நிஷாந்தினி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ‘‘எங்களுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு குறித்து தகவல் ஏதும் இல்லை, திட்டமிட்டபடி எங்கள் நிகழ்ச்சியை நடத்துவோம்’’ என ராகுல் பசுபாலன் நேற்று அறிவித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. dailythanthi,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக