தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம
குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் தலைமையிலான
குழுவை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு
தாக்கல் செய்த சீராய்வு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாட்டில் செயல்படும் கிரானைட், மணல் குவாரிகள் உள்ளிட்ட கனிம
குவாரிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி உ.சகாயம் நியமனம்
செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பரில்
11-ம் தேதி பிறப்பித்தது.
இந்நிலையில், சுரங்க முறைகேடு குறித்த சகாயம் விசாரணைக் குழு நியமனத்திற்கு எதிரான தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.
சகாயம் குழு நியமனத்தை மறுபரிசீலனை செய்யக்கோரி தமிழக அரசு சார்பில் தொழிற்துறை செயலாளர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மறு சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியார்
அடங்கிய அமர்வு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என தெரிவித்து மனுவை
தள்ளுபடி செய்தது.
சகாயம் குழு அமைக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குப் பின்னர் தமிழக அரசு மறு
சீராய்வு மனு தாக்கல் செய்ய காரணம் என்ன என உயர் நீதிமன்றம் அரசுக்கு
கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசுக்கு ரூ.10,000 அபராதம்
விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.tamil.hindu.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக