முத்துராமலிங்கத்
தேவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது
சிலைக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.,வினர் மாலை
அணிவித்தனர். பின் நிருபர்களிடம் வைகோ பேசியபோது, ’’தலித் மக்களை மீனாட்சி
அம்மன் கோயிலுக்குள் அழைத்து சென்ற பெருமை தேவரையே சாரும். ஏழை மக்களுக்கு
தனது சொந்த நிலங்களை தானமாக தாரை வார்த்து கொடுத்தவர் தேவர்.
சிறு வயது முதலே முத்துராமலிங்கத் தேவர் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் மீது கொண்டுள்ள மரியாதையால், சிறையில் இருந்த ஆண்டுகளை தவிர, 39 ஆண்டுகளாக நான் பசும்பொன் கிராமத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வருகிறேன். ஜாதி மற்றும் சமூக ஒற்றுமையை வலியுறுத்தியவர் தேவர், என்றார்.மேலும், கூட்டணி குறித்து கலைஞர் அன்பாக சொன்னது மகிழ்ச்சி அளிக்கிறது. அழகிரியும், ஸ்டாலினும் எனக்கு ஒன்று தான்.லோக்சபா பொதுத்தேர்தலுக்கு முன் மதுரையில் அழகிரியை சந்தித்தேன். அப்போது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி தான், நேற்று முன்தினம் ஸ்டாலினை சந்தித்தபோதும் ஏற்பட்டது. இருவருமே எனக்கு ஒன்று தான். கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் மட்டுமே பேச முடியும்’’ என்றார். nakkheeran,in

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக