தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை
விடுவிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு பிரவீண்குமார் கடிதம் எழுதியதைத்
தொடர்ந்து, புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா
நியமிக்கப்பட்டுள்ளார்.
சந்தீப் சக்சேனா தமிழக வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மை
செயலாளராக இதுவரை பணியாற்றி வந்தார். இவர் விரைவில் பதவி ஏற்க உள்ளார்.
பிரவீண்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது 144 தடை உத்தரவு
பிறப்பித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். பிரவீண்குமாருக்கு புதிய பொறுப்பு
இன்னும் அறிவிக்கப்படவில்லை. அவர் காத்திருப்போர் பட்டியலில்
வைக்கப்பட்டுள்ளார்
தன்னைத் தலைமை தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து விடுவிக்கும்படி தேர்தல்
கமிஷனுக்கு பிரவீண்குமார் கடிதம் எழுதி இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது. tamil.வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக