திங்கள், 27 அக்டோபர், 2014

Swiss கருப்புபணம் முகேஷ் அம்பானி அணில் அம்பானி கோகிலா அம்பானி !காப்பாற்றும் பாஜக-காங்கிரஸ்: கெஜ்ரிவால்

முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, கோகிலாபென் அம்பானி, சந்தீப் டாண்டன், நரேஷ் கோயல் உள்ளிட்ட 15 பேர் வெளிநாட்டில் சட்டவிரோதமாக கறுப்பு பணம் பதுக்கியுள்ளனர். கறுப்பு பணம் பதுக்கிய அனைவரது பெயரையும் மத்திய அரசு வெளியிட வேண்டும். 
டெல்லி: வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் அம்பானி சகோதரர்கள் உட்பட பலரையும் காங்கிரஸும் பாஜகவும் காப்பாற்றுகிறது என்று டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சாடியுள்ளார். கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் 3 தொழிலதிபர்களின் பெயரை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்தது. மேலும் பலரது பெயரும் வெளியாகும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.  இந்த நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியதாவது: வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி 2 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டிருந்தது. அந்த பட்டியலில் தற்போது மத்திய அரசு தெரிவித்திருக்கும் 3 பேரின் பெயரும் இடம்பெற்றிருந்தது. தற்போது பாஜக அரசு வெளியிட்டிருக்கும் பட்டியல் முழுமையானது அல்ல. காங்கிரஸ், பாஜகவைப் பொறுத்தவரை தங்களுக்கு வேண்டியவர்களைப் பாதுகாக்கவே செய்கிறது. அம்பானி சகோதரர்களும் அவரது தாயாரும் வெளிநாட்டில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளனர். இவ்வாறு கேஜ்ரிவால் கூறினார்.
tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: