வாஷிங்டன்: அமெரிக்காவில் சீக்கியர்களுக்கே உரித்தான கத்தியுடன் சென்ற
சீக்கிய தம்பதியினர் திரை அரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிலும் கனடாவிலும் 347 திரை அரங்குகளக் நடத்தி வருகிறது ஏஎம்சி
குழுமம். கடந்த 22-ந் தேதியன்று மன்ஜோத்சிங் தமது மனைவியுடன் மேன் ஆப்
ஸ்டீல் என்ற திரைப்படம் பார்க்க கலிபோர்னியாவின் எமெரிவில்லேவில் உள்ள
ஏஎம்சி சினிமா திரை அரங்கத்துக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆயுதத்துடன் உள்ளே
நுழைய முயன்றதாகக் கூறி அவரையும் அவரது மனைவியையும் திரை அரங்கில் இருந்து
வெளியேற்றியுள்ளது நிர்வாகம்.
இதற்கு ஐக்கிய சீக்கியர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மற்ற
அமெரிக்கர்களைப் போல மன்ஜோத்சிங்கும் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியவர்
என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஆனால் ஏஎம்சி நிறுவனமோ, 5.5 இஞ்ச் நீளமுள்ள கத்தியுடன் மன்ஜோத்சிங்
வந்தார். இது எங்களது நிர்வாகத்தின் படி தடை செய்யப்பட்ட ஆயுதமாகும். இதை
அனுமதிக்க முடியாது. இது மதவிவகாரம் அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக