தர்மபுரி: தன் மகன் இளவரசன் சாவுக்கு பாமக நிறுவனத் தலைவர் டாக்டர்
ராமதாஸ், அவர் மகன் அன்புமணி, திவ்யாவின் தாய் தேன்மொழி உள்ளிட்ட 12
பேர்தான் காரணம் என புகார் கூறியுள்ளனர் தர்மபுரி இளவரசனின் பெற்றோர்.
இளவரசனின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது. அவர் ரயில் அடிபட்டி
இறக்கவில்லை என்பது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகியுள்ளது. பிரேத பரிசோதனை
அறிக்கையும் அதற்கு வலு சேர்த்துள்ளது.
எனவே இளவரசன் உடலை வாங்க மறுத்த பெற்றோர், மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட
வேண்டும் என்று கோரியுள்ளனர். எனவே இளவரசன் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனை
பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இளவரசனின் பெற்றோர் இளங்கோ - அம்சவேணி ஆகியோர் தர்மபுரி
மாவட்ட கலெக்டர் லில்லியிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்கள்.
அந்த மனுவில் எனது மகன் சாவுக்கு பா.ம.க. தலைவர்கள், டாக்டர் ராமதாஸ்.
அன்புமணி, திவ்யாவின் தாய் தேன்மொழி, , தர்மபுரி முன்னாள் எம்.பி. டாக்டர்
செந்தில், மாநிலத் துணைச் செயலாளர் சரவணன், அவர்களது வழக்குரைஞர் பாலு,
செல்லன்கோட்டாய் பகுதியைச் சேர்ந்த ராஜா, முருகேசன் மற்றும் 12 பேர் தான்
பொறுப்பு. மேலும் என் மகன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்
என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த புகாரை பெற்றுக் கொண்டுள்ள போலீசார், இதற்கான விசாரணை குறித்து எந்த
உறுதியும் அளிக்கவில்லை. புகாரையும் இன்னும் பதிவு செய்யவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக