சென்னை: ""தமிழகத்தில், பொது வினியோக திட்டத்தின் கீழ், அனைத்து
தரப்பினரும் பயன்பட்டு வரும் நிலையில், தேசிய உணவு பாதுகாப்பு
சட்டத்திலிருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.முதல்வர்
ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை: அவசரச் சட்டம் என்பது அசாதாரண
சூழ்நிலையில் மட்டுமே கொண்டு வர வேண்டியது. நான்கு ஆண்டுகளாக
விவாதிக்கப்பட்டு, கருத்தொற்றுமை எழாத நிலையில், அவசரச் சட்டத்தின் மூலம்,
தேசிய உணவுப் பாதுகாப்பு மசோதாவை, சட்டமாக்க முயல்வது, ஏற்றுக் கொள்ள
முடியாதது. உண்மையான உணவு பாதுகாப்பை, மக்களுக்கு ஏற்படுத்த வேண்டுமென்ற
எண்ணம் இல்லாமல், தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் அரசியல் சித்து
விளையாட்டாக, இச்சட்டத்தை நிறைவேற்ற முயல்வதற்கு, கடும் கண்டனத்தை
தெரிவித்துக் கொள்கிறேன். விவாதித்து எடுக்க வேண்டிய முடிவை இப்படி அவசர சட்டம் மூலம் நிறைவேற்றுவது
சரியா என ஜெயா கேட்பதற்கு கொஞ்சமும் தகுதியிலாதவர்... இங்கே இவர்
எல்லாவற்றையுமே அவசர சட்டம் போலத்தானே நிறைவேற்றுகிறார்? எந்த திட்டத்தை
எதிர்கட்சிகளிடம் விவாதம் நடத்தி நிறைவேற்றினார்?
மாநில அரசுகளின் கருத்து கேட்புக்காக, 2011ல் வரைவு மசோதாவை அனுப்பியபோதே, எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். பிரதமர் தலைமையில் நடந்த, தேசிய வளர்ச்சிக்குழு கூட்டங்களிலும், இச்சட்டம் குறித்து, தமிழகத்தின் எதிர்ப்பை தெரிவித்திருந்தேன். தேசிய அளவில், பொது வினியோகத் திட்டத்தை சீரமைக்காமலும், ரயில் மூலம், பொருட்களை தேவையான இடங்களுக்கு கொண்டு செல்வதை உறுதிப்படுத்தாமலும், சேமித்து வைக்க கிடங்குகளை அதிகரிக்காமலும் நிறைவேற்றப்படும் இந்த மசோதா, ஏழை, எளிய மக்களுக்கு உணவு பாதுகாப்பை தராது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும், பொது வினியோகத் திட்டத்துடன், தேசிய உணவு பாதுகாப்பு மசோதவை ஒப்பிட்டுப் பார்த்தால், மத்திய அரசு கொண்டு வருவது, "தேசிய உணவு பாதுகாப்பின்மை மசோதா' என்பது தெளிவாகும். எனவே, தமிழகத்தில், பொது வினியோகத் திட்டம் மூலம், அனைத்து தரப்பு மக்களும் பாகுபாடின்றி பயனடைவதால், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, இத்திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும்; தற்போது வழங்கும் அரிசியின் அளவை குறைக்கக் கூடாது. மக்கள் விரோத நடவடிக்கைகளை மூடி மறைக்க எடுத்துள்ள இந்த முயற்சி படுதோல்வியில் முடியும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். dinamalar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக