நமது நாட்டின் உயர்நீதி
மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதிகளை நியமிக்கும் போது
தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கு
இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியான
தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் கருத்து தெரிவித்துள்ளார். நாட்டின்
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ஜூலை 19-ஆம் தேதியன்று சதாசிவம் பொறுப்
பேற்க உள்ளார்.
இதனையொட்டி ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அவர்
அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது: உயர்நீதிமன்றங்கள், மற்றும்
உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும்போது இடஒதுக்கீட்டு முறை பின்பற்ற
வேண்டும். இந்நிய மனங்களின் போது தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகப்
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான பிரதிநிதித்துவம், இடஒதுக்கீட்டை
கடைப்பிடிக்க வேண்டும்.
இதன் மூலம் நாட்டின் அனைத்து சமூக
மக்களுக்கும் வாய்ப்பளிக்கப் படும். அதற்காக ஏற்கெனவே கடைப்பிடித்து வரும்
குறிப் பிட்ட தகுதிகளைப் புறக் கணித்துவிட வேண்டும் என்பது அல்ல. அதாவது
தகுதியற்ற நபர் களை தேர்வு செய்வது என்பது இதற்கு அர்த்தம் அல்ல..ஆனால்
இடஒதுக்கீடு என்ற சலுகை வழங்கப்பட வேண்டும். அரசு நிர்வாகத்துகு
நீதிமன்றங்கள் எதிரி அல்ல..
நீதித்துறை, சட்டசபை, அரசு நிர்வாகம்
மூன்றும் அரசியல் சாசனத்தின் மூன்று அங்கங்களாகும். ஒவ்வொன்றும்
மற்றொன்றுடன் இணைந்து இயங்கி வருகின்றன.
பொதுவாக அரசின் நிர்வாக நடவடிக்கைகளில்
நீதிமன்றம் தலையிட முடியாது; அதே போல் தான் நீதிமன்றத்தின் செயல்பாடு களை
அரசால் தடுக்கவும், தலையிடவும் முடியாது; நீதித்துறை ஊழல்களுக்கு
அப்பாற்பட்டது என நான் சொல்லவில்லை.
ஆனால் இதர துறைகளை ஒப்பிடுகையில் நீதித்
துறையில் ஊழல் குறைவுதான். ஊழல் வழக்குகளில் கடந்த 5 ஆண்டுகளில் விசாரணை
விரைவு படுத்தப்பட்டிருக்கிறது. குற்றத்தின் அடிப்படையிலேயே பிணை
அளிப்பதும், மறுக்கப்படுவதும் முடிவு செய்யப் படுகிறது; தகவல் அறியும்
உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து விவரங்களையும் அளிப்பது தவறல்ல என்றார்
அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக