தருமபுரி
திவ்யாவின் காதல் கணவர் இளவரசன். தருமபுரி அரசுக் கல்லூரி
பின்புறம் உள்ள
தண்டவாளத்தில் இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சடலத்தை கைப்பற்றிய
போலீசார், தற்கொலை செய்து கொண்டாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
>மேலும்,
தண்டவாளத்தின் அருகில் இருந்த அவரது இருசக்கர வாகனத்தில் இருந்த
கைப்பையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இளவரசனின் சட்டைப்பையில் 2 கடிதம்
இருந்தாகவும் கூறப்படுகிறது.தர்மபுரி மாவட்டம், செல்லன்கொட்டாய்
கிராமத்தைச் சேர்ந்த, திவ்யாவும், நாய்க்கன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த
இளவரசனும், வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் திருமணம்
செய்து கொண்டனர்.இதையடுத்து, திவ்யாவின் தந்தை, தற்கொலை செய்து கொண்டார்.
அதைத்தொடர்ந்து, வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்த
சூழ்நிலையில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, தனது மகளை கடத்தி்ச் சென்று
கட்டாய திருமணம் செய்ததாகவும் மீட்க கோரியும், அவரை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த
வேண்டும் என்றும் ஆட்கொணர்வு மனு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல்
செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து
திவ்யா ஆஜரானார். தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில், நேற்று திவ்யா,
கணவன் இளவரசனுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. தாயுடன் செல்வதாக
கூறியிருந்தார். பின்னர் இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனுவை தாய் தேன்மொழி
வாபஸ் பெற்றார். வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த
சூழ்நிலையில் தருமபுரி அரசு கலைக் கல்லூரியின் பின்புறம் ரயில்
தண்டவாளத்தில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் இளவரசன். தகவலறிந்த போலீசார்
உடலை மீட்டனர். அப்போது அவரது சட்டபையில் இரு கடிதங்கள் இருந்துள்ளதாக
கூறப்படுகிறது. எனவே அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும்
கூறப்படுகிறது nakkheeran.i
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக