கட்சி உத்தரவுக்கு மாறாக, மாற்று கட்சி வேட்பாளருக்கு ஓட்டளித்த காரணத்தை,
வரும், 10ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும். உரிய விளக்கம் அனுப்ப
தவறினால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, ஏழு தே.மு.தி.க., -
எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடித விவரம்:
ராஜ்யசபா
தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனுக்கு ஓட்டளிக்க
வேண்டும் என, கட்சியின் பொதுச் செயலர் ஆகிய நானும், கொறடாவும் கடந்த, 19
மற்றும் 20ம் தேதி கடிதம் எழுதியிருந்தோம்.ஆனால், நீங்கள் மாற்று கட்சிக்கு
ஓட்டளித்ததாக அறிகிறேன். இதன்மூலம், கட்சியின் கட்டளையையும்,
கட்டுப்பாட்டையும் நீங்கள் மீறியுள்ளீர்கள். இதனால், கட்சியின் அனைத்து
பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும், தற்காலிகமாக நீங்கள்
நீக்கி வைக்கப்படுகின்றீர்கள். கட்சியின் உத்தரவுக்கு மாறாக, மாற்று கட்சி
வேட்பாளருக்கு ஓட்டளித்த காரணத்தை, வரும், 10ம் தேதிக்குள் தெரியப்படுத்த
வேண்டும். உரிய விளக்கம் அனுப்ப தவறினால், மேற்கூறிய குற்றச்சாட்டுகளை
மறுப்பதற்கில்லை என, முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகளை, தங்கள்
மீது எடுக்க கட்சி உரிமை பெற்றுள்ளது.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.- நமது நிருபர் -
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக