தனது இரண்டு குழந்தைகளின் பெயரில் புதிதாக படத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார் நடிகர் சூர்யா.
தமிழ் சினிமாவில் தற்போதைக்கு பிஸியாக இருக்கும் பட நிறுவனங்களில் ஒன்று
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம். இந்த நிறுவனத்தை சூர்யா, கார்த்தியின்
உறவுக்காரரான ஞானவேல்ராஜா நடத்தி வருகிறார். இந்த கம்பெனியே கிட்டத்தட்ட
சூர்யா குடும்பத்தின் சொந்தக்கம்பெனி போலத்தான் செயல்பட்டு வருகிறது.
காரணம் இந்த கம்பெனி சூர்யா, கார்த்தி இருவரை மட்டும் வைத்து படங்களை
தயாரித்து வருகிறது. சூர்யாவின் கால்ஷீட் தேதிகள் கேட்டு வரும் முன்னணி
இயக்குனர்களை, அப்படியே கார்த்தியின் கால்ஷீட் தேதிகள் கொடுத்து படத்தை
தயாரித்து விடுகிறதாம் ஸ்டுடியோ க்ரீன்.
அதாவது முதலில் வெங்கட்பிரபுவும், ராஜேஷும் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார்களாம். ஆனால் இருவருமே தற்போது கார்த்தி நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றனர். அத்துடன் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஹரி இயக்கும் அடுத்த படத்திற்கும் கார்த்தி தான் நாயகனாம். இந்நிறுவனம் படம் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல் படத்தை வாங்கி விநியோகம் செய்தும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவும் புதிதாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் வசூல் வேட்டை நடத்த தயாராகிவிட்டார். ஆமாங்க அவர் புதிதாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இந்நிறுவனத்திற்கு D - Diya, D - Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து 2D Entertainment என்று பெயரிட்டு இருக்கிறார். இந்த நிறுவனத்தில் முதல் படமாக சிங்கம் -2 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறார் சூர்யா. அடுத்து இதன் மூலம் சிறு பட்ஜெட் படங்களை தயாரிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக