நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறத்தில் செல்வநாயகி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக கேளம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பண்ணை தொழிலாளிகளிடம் விசாரித்தனர். தையூர் ஏரி எதிர்வாயல் பகுதியை சேர்ந்த பிளம்பர் கண்ணன் (32) மீது சந்தேகம் வந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது, செல்வநாயகியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
பண்ணை வீட்டு வேலைக்கு வந்து சென்றபோது செல்வநாயகியுடன் கண்ணனுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் சில மாதங்களாக காதலித்து வந்தனர். பண்ணையில் வேலைபார்க்கும் எல்லாரிடமும் செல்வநாயகி சகஜமாக பழகி உள்ளார். மற்ற ஆண்களிடம் அவர் சிரித்து பேசுவது கண்ணனுக்கு பிடிக்கவில்லை. இதனால் யாரிடமும் பேசக்கூடாது என்று செல்வநாயகிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். ‘காதலிக்கும்போதே என் மீது சந்தேகப்படுகிறாயே, உன்னை எப்படி திருமணம் செய்து கொள்வது’ என்று கூறிய செல்வநாயகி, கண்ணனிடம் பேசுவதை படிப்படியாக குறைத்து வந்தார்.
இந்நிலையில் வீட்டு செலவுக்கு அனுப்ப ரூ.2 ஆயிரம் தேவைப்பட்டதால் கண்ணனிடம் கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு பணம் கொடுக்க பண்ணை வீட்டுக்கு கண்ணன் வந்துள்ளார். அப்போது நாய்க்கு சாப்பாடு வைக்க செல்வநாயகி வெளியே வந்துள்ளார். இருவரும் வீட்டின் பின்புறம் சென்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன், செல்வநாயகியின் வாயை பொத்தி, தோளில் போட்டிருந்த துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். கைதான பிளம்பர் கண்ணனிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக