சனி, 6 ஜூலை, 2013

ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்க நிகரகுவா, வெனிசுலா சம்மதம்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனம் உளவு பார்த்த ரகசியங்களை வெளிப்படுததிய எட்வர்ட் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் வழங்க நிகரகுவா மற்றும் வெனிசுலா அதிபர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து ஸ்னோடென் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். அவர் 10 நாட்களுக்கும் மேலாக மாஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் தங்கி இருக்கிறார். இவர் அடைக்கலம் கேட்டு நிகரகுவா, வெனிசுலா, இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளுக்கு கோரிக்கை அனுப்பினார். இந்த கோரிக்கையை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் நிராகரித்தன. இதில் நிகரகுவா மற்றும் வெனிசுலா நாடுகள் ஸ்னோடெனுக்கு தஞ்சம் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. நிகரகுவாவின் அதிபர் டேனியல் ஒர்டேகா மற்றும் வெனிசுலா அதிபர் நிகொலஸ் மதுரோ ஆகியோர் நேற்று மதியம் தத்தமது நாடுகளில் நடந்த நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பினை வெளியிட்டனர்.

கருத்துகள் இல்லை: