திங்கள், 2 ஜூலை, 2012

பெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை

சென்னை ராயபுரம் சிங்காரத் தோட்டம் போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கீதா (32). பெண் போலீஸ் ஏட்டு. சென்னை கமிஷனர் ஆபீஸ் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் சங்கீதா பணிபுரிந்து வந்தார். அவரது கணவர் வேலு (39). இவர் தனியார் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
 இவர்களுக்கு ரஞ்சனா (5), ரச்சனா (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது.
பெண் போலீஸ் ஏட்டு சங்கீதா நேற்று வேலைக்கு போய்விட்டு இரவு 10 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது அவருக்கும் கணவர் வேலுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சங்கீதா உடலில் மண்எண்ணை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.


 பற்றி எரிந்த தீயை அணைக்க வேலு முயன்றார். இதில் அவருடைய கைகளும் கருகின. உயிருக்கு ஆபத்தான நிலையில் சங்கீதா கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார்.
அவருடைய கணவர் வேலுவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் குறித்து ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பெண் போலீஸ் ஏட்டு சங்கீதாவின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

கருத்துகள் இல்லை: