பால் விலை, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும், திமுக
முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அதிமுக அரசின்
அடக்குமுறையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை
நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.
தி.மு.கவின் சிறை
நிரப்பும் போரட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் முன்னாள்
அமிச்சர்கள், தி.மு.க நிர்வாகிகள் ஆயிரகணக்கான தொண்டர்கள் கைதாகினர்.
இது குறித்து தி.மு.க
தலைவர் கலைஞர் கூறியதாவது: தி.மு.க போரட்டத்தில் எதிர்பார்த்த அளவை விட
திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க.வின் போராட்டம் பிரமாண்டமான
வெற்றியை பெற்று உள்ளது. எத்தனை போராட்டங்கள் நடத்தினால் அதிமுக அரசு
திருந்தும் என்ற நம்பிக்கை இல்லை. எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டத்தில்
திமுகவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக