செக்ஸ் சர்ச்சையில் சிக்கிய கோல்ப் வீரர் டைகர் உட்சுக்கும் அவரது மனைவி எலினுக்கும் விவகாரத்து கிடைத்தது.
உலகின் பணக்கார விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ், கோல்ப் வீரரான இவர், கடந்த ஆண்டு ரூ.585 கோடி வரை சம்பாதித்து போபர்ஸ் வெளியிட்ட பத்திரிகையில் முதலிடத்தை பிடித்தார்.
34 வயதான டைகர் உட்சுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்த அம்பலம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதனால் அவரது புகழுக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் அவரது மனைவி எலின் நார்டிகிரென் அதிர்ச்சி அடைந்தார். டைகர் உட்சிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு செய்தார். இதனால் டைகர் உட்ஸ் தனது மனைவியிடம் மன்னிப்பு கேட்டார். ஆனாலும் எலின் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
அதன்படி டைகர் உட்சுக்கும், அவரது மனைவி எலினுக்கும் இடையே அதிகா ரப்பூர்வமாக விவாகரத்து வழங்கப்பட்டது. சுவீடனை சேர்ந்த மாடல் அழகியான 30 வயதை சேர்ந்த எலின் 6 ஆண்டுகால திருமண உறவை முறித்துக் கொண்டார். இரு வரும் பரஸ்பரமாக பிரிந்து கொண்டனர்.
விவாகரத்துக்காக கொடுக்கப்பட்ட பண பரிவர்த்தனை விவரம் தெரியவில்லை. இவர்களுக்கு 3 1/2 வயதில் சாம் என்ற மகளும், 1 1/2 வயதில் சார்லி என்ற மகனும் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக