சோமாலியத் தலைநகர் மொகாடிசுவில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 6 எம்பிக்கள் உள்ளிட்ட 32 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் துணை பிரதமர் தெரிவித்தார்.
பாதுகாப்புப் படை வீரர்களைப் போல மாறுவேடத்தில் வந்த ஷெபாப் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தோர், எம்பிக்கள் தங்கியிருந்த ஹோட்டலில் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர். பின்னர் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபடாமல் தப்பிக்க தங்கள் உடலில் இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். அதிபர் மாளிகைக்கு வெகு அருகில் இந்த தாக்குதல் நடந்தது.
மொகாடிசுவின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இன்று மீண்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலியானார்கள். அவர்களில் 6 பேர் எம்பிக்கள். மேலும் உயர் அதிகாரிகள் பலரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளனர். ஏறத்தாழ 20 பேர் வரை ஓட்டலில் தங்கி இருந்த அப்பாவி பொது மக்கள் ஆவர்.
இந்த தாக்குதலுக்கு சோமாலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் கொடூரத்தையும், மனிதாபிமானத்தை அவர்கள் இழந்துவிட்டதையும் காட்டுகிறது என தகவல்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான் ஒமர் உஸ்மான் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக