யாழ் நல்லூர் கந்தசாமி கோவில் வளாகத்தில் அமையப் பெற்றுள்ள நாவலர் மணி மண்டபத்திற்குச் சென்ற பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாவலர் சிலையை மீண்டும் அங்கு வைப்பது தொடர்பாக ஆராய்ந்தார்.
நாவலர் சிலையை மீண்டும் பழைய இடத்தில் வைப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ் மாநகர சபை மண்டபத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் பிரகாரம் அப்பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் அவர்கள் அங்கு கலாசார உத்தியோகத்தர் உதயபாலனுடனும் கலந்துரையாடினார்.
பின்னர் கோயிலுக்கு வருகை தந்த பக்தர்களுடனும் அமைச்சர் அவர்கள் கலந்துரையாடியதுடன் நல்லை ஆதீன முதல்வரின் வாசஸ்தலத்திற்கு சென்று அவருடனும் கலந்துரையாடினார். அத்துடன் உற்சவ காலத்தின் போது குறிப்பாக இரவு வேளைகளில் கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வழிகளைக் கண்டறிந்து அவற்றை உடனடியாக சீர்செய்யுமாறும் யாழ் மாநகர முதல்வரிடம் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக