வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மின்சிக்கனம் தரும் "நீர்வழிச்சாலை'

""தமிழகத்தில் நீர்வழிச்சாலை அமைக்கப்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், மின்சார சிக்கனமும் கிடைக்கும்,'' என தேசிய நீர்வழிச்சாலை வளர்ச்சி தொழில்நுட்ப அமைப்பு தலைவர் ஏ.சி.காமராஜ் கூறினார்.

அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதி, 25 சதவீத மின்சாரம் மிச்சமாகும் என்பதால், விவசாயிகளுக்கு இலவச பம்பு செட் திட்டத்தை அறிவித்துள்ளார். நிலத்தடி நீர் குறைந்து கொண்டே போவதால்தான் அதிக மின்சாரம் செலவாகிறது. நிலத்தடி நீர்மட்டம் உயர, சமவெளிக் கால்வாய் அமைத்து, நீர்வழிச்சாலையாகவும் பயன்படுத்தலாம். கடல் மட்டத்திற்கு மேல் 250 மீட்டர் உயரமுள்ள பகுதிகளில் இக்கால்வாயை அமைக்க வேண்டும். தமிழகத்தில் 900 கி.மீ., அளவு அமைக்கலாம். இதற்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும். மாநிலத்தின் பல பகுதிகளிலும் செல்லும் இக்கால்வாயை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதால் மாசு குறையும். மின்சாரம் தயாரிப்பு, விவசாயம் போன்றவற்றுக்கும் பயன்படுத்தலாம். இதன்மூலம் மின்செலவு 75 சதவீதம் குறைவதுடன், 1.50 கோடி பேருக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். நீர்வழிச் சாலை திட்டம் பற்றி ஆந்திரா, கர்நாடகா உட்பட பல மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. பீகார் மாநிலத்தில் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டதுடன், மத்திய அரசின் ஆலோசனையையும் பெற்றுள்ளனர்.

எதிர்காலத்தில் நீர்வழிச்சாலை மூலம் அனைத்து மாநிலங்களையும் இணைக்கலாம். இதனால் மின்சாரத்தை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு "பவர் கிரிட்' மூலம் கொண்டு செல்வது போல, வெள்ளப் பகுதியில் இருந்து வறண்ட பகுதிக்கு "வாட்டர் கிரிட்' மூலம் தண்ணீரை கொண்டு செல்லலாம். நாடுமுழுவதும் ஒரே அளவாக 250 மீட்டர் உயரத்தில் கால்வாய் அமையும் என்பதால் நீர்மட்ட விதிப்படி இது சாத்தியமாகும். இதனை நதிநீர் இணைப்பு போன்று கருதக் கூடாது. நதிநீர் இணைப்பில், ஒரு மாநில தேவைக்கு தண்ணீர் வழங்கினால், தண்ணீர் பெற்ற மாநிலம் மீண்டும் அத்தண்ணீரை திருப்பித் தரவாய்ப்பில்லை. ஆனால் இத்திட்டத்தில் அனைத்து நீர்வழிச்சாலையும் ஒரே மட்டத்தில் செயல்படுவதால், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தண்ணீரை கொண்டு செல்லவும், பற்றாக்குறை நீங்கிய பின், தண்ணீரை திருப்பி வழங்கவும் முடியும். தமிழக அரசு இத்திட்டத்தை பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரமேஷ் கண்ணன் - திருப்பூர்,இந்தியா
2010-08-27 11:15:05 IST
ஆகா அருமையான திட்டம்! இந்த திட்டத்தை கால தாமதமின்றி செயல்படுத்த வேண்டும். செயல்படுத்துமா அரசு ?!!...
guna - bangalore,இந்தியா
2010-08-27 11:02:52 IST
super...
BVS - Udamalpet,இந்தியா
2010-08-27 10:58:53 IST
40 கோடி தானே...பண்ணுங்கப்பா....172 கோடி கோட்டூர்புறம் லைப்ரரிகு செலவு பண்றீங்க....ஒரு நல்ல திட்டத்துக்காக 40 கோடி தானே...அதுவும் தமிழ்நாடு முழுவதுக்மான திட்டம்...கொஞ்சம் ஆலோசிங்க...ப்ளீஸ்...
hariharan - Malaysia,இந்தியா
2010-08-27 10:40:02 IST
மிகவும் பயனுள்ள திட்டமாகத்தான் தெரிகிறது. ஆனால் இது நம்ம அரசியல் வாதிகளுக்கு புரியணுமே! ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்துக்கு தண்ணி தரவே ஏகப்பட்ட இடையூறுகள்.உங்களைபோல திறமைசாலிகளை ஒதுக்கி வைத்ததால்தானே இந்திய நாடு இன்னும் முன்னேறாமல் இருக்கு. நம்ம அரசியல்வாதிகளிடம் தொலைநோக்கு பார்வை இல்லாததினால் எவ்வளவு நல்ல திட்டங்களை நிறைவேற்றாமல் இருக்கிறோம்...
அருள்ஜோதி - ஏறலூர்,இந்தியா
2010-08-27 10:09:57 IST
நோ இந்த திட்டம் தமிழ் நாட்டுக்கு தேவை இல்லை. கருணாநிதி கொள்ளை அடிக்க இன்னும் ஒரு வாய்ப்பு கொடுக்க நங்கள் தயாராக இல்லை....
ச.saravanen - cuddalore,இந்தியா
2010-08-27 10:02:12 IST
வெரி குட் சார்,அருமையான யோசனை. செய்தால் வருங்கால சந்ததியை காப்பாத்தலாம். இதிலும் எத்தனை கோடி கொள்ளை அடிக்கலாம் என்று அரசியல் வாதிகள் கணக்கு பார்க்காமல் இருந்தால் நல்லது....
ப.ஈஸ்வரன் - Tirupur,இந்தியா
2010-08-27 09:54:06 IST
அன்புள்ள டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இது ஒரு அருமையான வழி. உடன செயல்படுத்த விரும்புவீர்கள் என்று நினைக்கிறோம்...
Vijayaraghavan - NowinSunnyvaleCalifornia,யூ.எஸ்.ஏ
2010-08-27 09:41:45 IST
மிக நல்ல திட்டம் போல தோன்றுகிறது. மேலும் அதிக விளக்கம் அளித்தால் நம் போன்ற சாதாரண மக்களுக்கு புரியும். தமிழ் நாடு அரசு இதைப்பற்றி தீவிரமாக யோசிக்கலாம். மற்ற எல்லா இலவசங்களையும் சில ஆண்டுகளுக்கு நிறுத்திவிட்டு இந்த திட்டத்தில் முதலீடு செய்வது நன்மை அளிக்கும். தினமலர் வாசகர்கள் அரசியல் கட்சிகளை பற்றி விமர்சனம் செய்துகொண்டு இல்லாமல் இதைப்பற்றி ஆக்க பூர்வமாக யோசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்....
selvakumar - coimbatore,இந்தியா
2010-08-27 09:16:45 IST
இட் இஸ் வெரி குட் ப்ராஜெக்ட். கவர்மென்ட் ஷூட் கன்சிடர் this...
சேகரன் பழனிநாதன் - சிங்கம்புணரி,இந்தியா
2010-08-27 08:58:43 IST
மிகவும் அருமையான திட்டம். வானம் பார்த்த பூமியில் இன்று மலிவு விலையில் கிடைகிறது ஊழல். அந்த ஊழலில் விதைத்த விதைகளில் முளைத்த வைரம் நீர். வாழ்க உனது தேச பக்தி....
கார்த்திக் அரவிந்த் - மதுரை,இந்தியா
2010-08-27 08:20:33 IST
மதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் கருணாநிதி அய்யா அவர்களே, தயவு செய்து இந்த திட்டத்தை உடனடியாக செயல் வடிவம் பெற செய்யுமாறு தாழ்மையுடன் பணிந்து கொள்கிறேன். மிக்க நன்றி...
mehalai - terrebonne,கனடா
2010-08-27 07:59:43 IST
pamppu seta vida nalla idea entha neer vazhi salai. muthalvaree koncham yosanapannuga thalavare....
விஷ்ணு - singapore,இந்தியா
2010-08-27 07:56:00 IST
எதுனா தி மு க வுக்கு கமிசன் கிடைக்குமா ??? அப்பதான் பிளான் பண்ணுவோம்...!!!!...
ப.raj - chennai,இந்தியா
2010-08-27 07:25:24 IST
நன்றாக இருக்கிறது இன்னும் விரிவான விளக்கம் தேவை . தமிழகத்தை பொறுத்தவரை எந்த அரசியல்வாதிக்கும் எதிர்கால கனவுகள் மற்றும் அறிவு கிடையாது . தேவைஎல்லாம் பணம் , ஒட்டு பதவி அதிகாரம்...
அப்துல் மஜீது - ramnad,இந்தியா
2010-08-27 06:40:26 IST
ஆஹா என்ன ஒரு அற்புதமான திட்டம், கண்ணை மூடி கற்பனை செய்தால் அவ்வளவு இன்பம்.ஆனால் அது சாத்தியமாகுமா?ஒருவேளை ஆனால் கூட இரு கரை ஓரமும் குடிசையை போட்டுக்கொண்டு அடாவடித்தனம் பண்ணுவார்கள் நம்ம அரசியல் வாதிகளில் சிலபேர். அவர்களுக்கு போராடுவோம் என்று எல்லா நல்ல திட்டங்களையும் கெடுப்பார்கள்....
V.Subbarao - Singapore,இந்தியா
2010-08-27 06:34:15 IST
நமது நாட்டின் பல அறிஞர்கள் பல வளமூட்டும் செய்திகளை ஆய்ந்து சொல்லியும், பேசியும் வருகிறார்கள். இவைகளை தானாகவே முன்னின்று யோசித்து செயலாக்கவேண்டிய மத்ய, மாநில அரசுகள், ஓட்டுக்காக, இவைகளை மனத்திலிருத்தும் மனப்பான்மையிலும் கூட இல்லை. அறிஞர்களோ தங்கள் ஆழ்ந்த யோசனை மக்களுக்கு உபயோகமாக வேண்டுமென்ற ஆவல். என்ன செய்வது நம் மக்கள் 'கசாப்புக்கடைக்காரனைதான் நம்புகிறது.'...
மகேந்திரன் - சென்னை,இந்தியா
2010-08-27 06:32:04 IST
வரும் காலங்களில் நிகழ போகும் விவசாய தற்கொலைகளுக்கு ஒரே தீர்வு இது. புவியியல் சார்ந்த சவால்கள் இருந்தாலும், சவால்களை சாதகங்கள் ஆக்க கட்சி பாகுபாடு இன்றி ஒரு தேச உணர்வோடு பாடு படுவோம்!!!!...
karunanithi - singapore,சிங்கப்பூர்
2010-08-27 06:13:21 IST
நீர்வழி சாலை தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியம். விரைவில் செயல்படுத்தவேண்டும் ...கவனிப்பாரா முதல்வர்...
முத்து - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-08-27 02:55:38 IST
கொஞ்சம் புரியிற மாதிரித்தான் சொல்லுங்களேன்....
தேவன் - மனாமா,பஹ்ரைன்
2010-08-27 02:41:13 IST
இந்த பெயர் உள்ளவங்க திட்டம் தீட்டுவதில் வல்லவர்கள் போல. நல்ல திட்டம் ஐயா. சேதுவைவிட நல்ல திட்டமாக இருக்கும் போல....
kanna - வாஷிங்டன்DC,இந்தியா
2010-08-27 02:04:07 IST
இது ஒரு நல்ல திட்டமாக தெரிகிறது ! அரசியல் எதுவும் செய்யாமல் எல்லோரும் ஆதரவு தந்தால் இந்த அருமையான திட்டத்தை நிறைவேற்றலாம்....

கருத்துகள் இல்லை: