செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

நடிகைகளை போதை பழக்கத்துக்குஅடிமை ஆக்கியது எப்படி? அதிர்ச்சி தகவல்

ஆந்திராவில் போதை மருந்து கடத்தல் விவகாரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜாவின் தம்பிகளும், நடிகர்களுமான ரகுபாபு, பரத்ராஜ் இவர்களின் நண்பர் நரேஷ் ஆகியோரை ஆந்திரா போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு `கோகைன்' என்ற போதைப் பொருளை சப்ளை செய்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த விக்டர் என்கிற பிரட்லர் சிமா கிளமெண்ட் என்பவரும் பிடிபட்டார். இந்த சம்பவம் தெலுங்கு திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஆந்திரா போலீசார் நடத்திய விசாரணையில் நாள்தோறும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி வருகிறது. சினிமா துறையில் உள்ள சிலர் இரவு நேர நடன அரங்குகளுக்கு வருவது வழக்கம். அவர்களை இந்த கும்பல் மயக்கி போதை பழக்கத்தில் ஈடுபடுத்தி உள்ளனர்.
ஜுப்ளி ஹில்ஸ், பஞ்சாரா ஹில்ஸ், பேகம்பேட்டை போன்ற இடங்களில் உள்ள சில நடன அரங்கில் `கோகைன்' போதைப் பொருள் உபயோகிப்பதும் தெரியவந்துள்ளது
மும்பை மற்றும் சென்னையைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், விளம்பரமாடல்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோரை அழைத்து வந்து, அவர்களுக்கு போதைப் பொருளை ருசி பார்க்க வைத்து, அவற்றுக்கு அடிமை ஆக்கிய அதிர்ச்சி தகவல்கள் விசாரணையில் தெரியவந்து உள்ளது.
மேலும் நைஜீரிய, தென்ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 6 பேர் மூலம் சில நடிகர்கள் `கோகைன்' போதைப்பொருளை வாங்கி, விற்று அதில் வரும் பணத்தில் 40 சதவீதத்தை பெற்றுக் கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது
இந்த கும்பல் ஒரு மாதத்திற்கு 50 கிலோ `கோகைன்' போதைப் பொருளை மும்பைக்கும் அதன்பின் ஐதராபாத்திற்கும் கடத்திக் கொண்டு வந்து உள்ளனர். ஐதராபாத் நகரில் மட்டும் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய்க்கு இந்த கும்பல் வியாபாரம் செய்துள்ளது.
ஐதராபாத் நகரில் வெளிநாட்டினர் அதிகம் வசிக்கும் இடங்களில் போலீசார் முற்றுகையிட்டு நடத்திய விசாரணையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மேலும் 4 பேரை கைது செய்தனர். இவர்கள் விசா முடிந்தும் நாடு திரும்பாமல், இந்த போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டவர்களாவர்.
இதுபற்றி தகவல் தெரிந்த பலர் தப்பி ஓடிவிட்டனர். வெளிநாடுகளில் குறைந்த விலைக்கு `கோகைன்' போதைப் பொருளை வாங்கி வந்து, இங்கு ஒரு கிராம் 1000 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை விற்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: