ராஞ்சி: மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் தலைவர் ஒருவர் புகார் கூறியுள்ளார்.
மாவோயிஸ்ட் நக்சலைட் இயக்கத்தில் ஆண்களுக்கு நிகரான தகுதியும், அந்தஸ்தும் பெண்களுக்கும் தரப்பட்டுள்ளது. பல தாக்குதல் சம்பவங்களை பெண் தலைவர்களே தலைமை தாங்கியும் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் செக்ஸ் அடிமைகள் போல தங்களை மாவோயிஸ்ட் தலைவர்கள் நடத்துவதாக பெண் மாவோயிஸ்ட் தலைவர் ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன்னை மாவோயிஸ்ட் தலைவர்கள் மிரட்டி பல முறை கற்பழித்ததாக அவர் புகார் கூறியுள்ளார். அழரது பெயர் சோயி. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பல பெயர்கள் உள்ளன. ஜார்க்ராம் பகுதி கமாண்டராக இவர் இருந்தார்.
மாவோயிஸ்டுகளை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார் சோயி. இதுகுறித்து அவர் கூறுகையில்,
எனக்கு 17 வயதான போது மாவோயிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தேன். ஓராண்டு எனக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்தனர். பிறகு ஜார்க்கண்ட் மாநிலத்தில் காட்டுக்குள் உள்ள ஒரு முகாமில் இரவு காவல் பணி கொடுத்தனர்.
நள்ளிரவில் மிலிட்டரி பிரிவு தலைமை பொறுப்பில் இருக்கும் பிரகாஷ் என்பவர் வந்தார். குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். நான் தண்ணீர் பிடித்து கொண்டிருந்த போது என்னை கட்டிப் பிடித்தார். நான் எதிர்ப்பு தெரிவித்தேன். துப்பாக்கியை காட்டி என்னை கற்பழித்தார்.
இது பற்றி வெளியில் யாரிடமும் எதுவும் சொல்லக் கூடாது என்று என்னை பிரகாஷ் எச்சரித்தார். ஆனால் நான் இது பற்றி மாநில குழு உறுப்பினரான ஆகாஷ் என்பவரிடம் கூறினேன். அவர் தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது என்று கூறினார்.
கிஷன்ஜியிடம் இன்னொருவர் மனைவி!
தனது மனைவி அனுவை மாவோயிஸ்ட் மூத்த தலைவர் கிசன்ஜி வைத்திருப்பதாக கூறினார். நிறைய பெண்களை செக்சுக்கு பயன்படுத்தவே வைத்துள்ளனர் என்றும் அவர் கூறினார். பெண் மாவோயிஸ்டுகளில் பலர் பலருடன் தொடர்பு வைத்து கொண்டு காலத்தை தள்ளி வருகிறார்கள்.
பெண் மாவோயிஸ்ட்கள் கர்ப்பம் தரித்தால் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். உடனே கர்ப்பத்தை கலைத்து விட வேண்டும்.
இத்தகைய செக்ஸ் கொடுமை பற்றி நான் ஒரு தடவை கிசன்ஜி முன்னிலையில் பேசினேன். பெண்களின் கற்பை சூறையாடுபவர்கள் பற்றி தகவல்கள் தெரிவித்தேன். ஆனால் மாவோயிஸ்ட் தலைவர்கள் யாரும் நான் வெளிப்படையாக பேசுவதை விரும்பவில்லை.
என்னை தனிமைப்படுத்தினார்கள். மற்ற பெண் போராளிகள் என்னுடன் பேச தடை விதிக்கப்பட்டது. மாவோயிஸ்ட் தலைவர்கள் அனைவரும் என் கற்பை சூறையாடுவதில் தான் குறியாக இருந்தனர். என்னை போல கற்பை இழந்த பெண்கள் பலர் உள்ளனர்.
மாவோயிஸ்டுகள் மக்களுக்காக போராடுவதாக கூறிக் கொண்டு அநீதி தான் செய்கிறார்கள். மூத்த தலைவர்களுடன் நெருக்கம் இல்லாத பெண்களை எல்லாரும் இஷ்டத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.
நான் பெண்களை ஒருங்கிணைத்து போராடும் பணியை சிறப்பாக செய்வேன். இதற்காகவே என்னை விட்டு வைத்திருந்தனர். 4 மாதத்துக்கு முன்பு நான் தப்பி வந்து விட்டேன்.
மாவோயிஸ்டு தலைவர்களின் காமவெறி செயல்களை அம்பலப்படுத்த போகிறேன். வரும் 26-ந் தேதி முதல் நான் மாவோயிஸ்டு இயக்கத்தில் இருந்து நிரந்தரமாக பிரியப்போகிறேன்.
என் கற்பை சூறையாடிய மாவோயிஸ்டுகள் பற்றி உலகுக்கு சொல்லப் போகிறேன் என்று கூறியுள்ளார் சோயி.
சோயியின் புகார்களால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தேடப்படும் பெண் மாவோயிஸ்டுகள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் இந்த சோயி என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் இவர் பகிரங்கமாக வெளிவந்து சரணடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக