போதை மருந்து கும்பலுடன் நடிகை த்ரிஷாவுக்கு எந்த தொடர்பும் இல்லை என, அவரது தாயார் உமா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் சகோதரர்கள் போதை மருந்து வாங்கும்போது, கடந்த வாரம் ஹைத்ராபாத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்று ஹைத்ராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களின் செல்போனில் நடிகை த்ரிஷாவின் செல் நம்பரும் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தகவல்கள் குறித்து த்ரிஷா தாயார் கூறியதாவது, என் மகள் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள். இதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. இதுகுறித்து எங்களது வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கானிடம் இதுகுறித்து பேசினோம். அவர் பயப்பட வேண்டாம் என சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் குறித்து போலீசார் இதுவரை எங்களிடம் தொடர்பு கொண்டு பேசவில்லை.
த்ரிஷா இந்த விஷயத்தை பெரிது படுத்தவில்லை. நாங்கள் இதற்கெல்லாம் அழக்கூடிய ஆள்கிடையாது. த்ரிஷாக்கு நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். குடும்பத்தினர் நாங்கள் இருக்கிறோம் ஏன் எங்களை குறி வைத்து இதுபோன்ற அவதூறுகளை பரப்பிவிடுகிறார்கள் என தெரியவில்லை. என்ன உள்நோக்கம் இருக்கிறது என்றும் தெரியவில்லை. தொடர்ந்து இதுகுறித்து அவதூறு கிளப்பும் பட்சத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க எங்களது வழக்கறிஞர் நடராஜ் தயாராக உள்ளார் என, உமா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுபற்றி தெலுங்கு நடிகர்கள் சங்க தலைவர் முரளிமோகன் கூறும்போது, போதை கும்பலுடன் நடிகர், நடிகைகளுக்கு தொடர்பு இருப்பதாக சொல்வதில் உண்மையில்லை. இது கலைஞர்களின் இமேஜை கெடுக்கும் விதமாக உள்ளது. தெலுங்கு பட உலகுக்கு எதிராக போலீசார் செயல்படுகின்றனர் என்றார்.
ஐதராபாத் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் கூறுகையில், போதை மருந்து கும்பலுடன் தெலுங்கு திரையுலகில் அனைவருக்குமே தொடர்பு உள்ளதாக கூறவில்லை. ஆனால் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதனால் அவர்களை விசாரிக்க வேண்டியுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக