வியாழன், 26 ஆகஸ்ட், 2010

எம்.பிக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அரசு-தொழிலாளர்களுக்கு தினக் கூலி வெறும் ஒரு ரூபாய்

இந்திய எம்.பிக்களுக்கை கை மற்றும் பை கொள்ளாத அளவுக்கு சம்பளம், சலுகைகள், வசதிகளை வாரி வழங்குகிறது மத்திய அரசு [^]. ஆனால் அதே மத்திய அரசின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் கீழான வேலைத் திட்டத்தில் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் மட்டு்மே கூலி கொடுக்கும் அவலமும் நடந்து வருகிறது.

சமீபத்தில் இந்திய எம்.பிக்களுக்கு 300 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்பட்டது. ஆனால் இது போதாதென்று கொடி உயர்த்தி நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்து விட்டனர் எம்.பிக்கள். இதை விடுவோம் இது பணக்காரர்களின் போராட்டம் [^].

நமது நாட்டின் ஒரு பகுதியில் அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாத ஒரு ஏழைக் கூட்டம் [^] படும் பாட்டைப் பார்ப்போம்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டம்தான் டாங்க். இங்குள்ள கிராம மக்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழான வேலை திட்டத்தின் மூலம் பெறும் ஒரு நாள் சம்பளம் என்ன தெரியுமா - வெறும் ஒரு ரூபாய்தானாம். ஒரு நாள் முழுக்க கடுமையாக உழைத்தாலும் இந்த ஊதியத்தைத்தான் கொடுக்கிறார்களாம்.

இவர்கள் அனைவரும் நிலமற்ற ஏழை மக்கள். கூலி வேலை மட்டுமே பார்த்து குடும்பத்தை ஓட்டுபவர்கள். அதிலும் மத்திய அரசு அமல்படுத்தி வரும் இந்த தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை முழுமையாக நம்பி இருப்பவர்கள். ஆனால் ஒரு நாள் முழுக்க பாடுபட்டாலும் தங்களுக்கு ஒரு ரூபாய்தான் கூலியாக தரப்படுவதாக குமுறுகிறார்கள் இந்த வயிறு ஒட்டிப் போன அப்பாவித் தொழிலாளர்கள்.

ராம்பூல் என்பவர் கூறுகையில், நான் குடலியா கிராமத்தைச் சேர்ந்தவன். அங்குள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேலை பார்த்து வருகிறேன். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் உடல் தேயத் தேய உழைக்கிறேன். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேலை பார்க்கிறேன். ஆனால் எனக்கு வெறும் ஒரு ரூபாயைத்தான் சம்பளமாக தருகிறார்கள்.

ஒரு நாள் சம்பளம் ரூ. 100 என்று கூறியிருந்தார்கள். ஆனால் அப்படித் தருவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்தான் என்று கூறி விட்னர். இதை வைத்துக் கொண்டு எனது பிள்ளைகளை எப்படி நான் வளர்க்க முடியும் என்றார் கடும் கோபத்துடன்.

ராம்பூல் கிராமத்தைச் சேர்ந்த 99 பேர் இந்த திட்டத்தின் கீழ் வேலை பார்க்கின்றனர். அனைவரும் தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள். அனைவருக்கும் ஒரு ரூபாய் கூலிதான் தரப்பட்டுள்ளதாம்.

இது என்ன அநியாயம் என்று குமுறுகிறார்கள் இந்த அப்பாவி மக்கள். இவர்களின் கடுமையான உழைப்பு காரணமாக இன்று தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டு தண்ணீர் நிரம்பி நிற்கிறது. ஆனால் இவர்களின் கண்களிலோ கண்ணீர் வழிந்தோடி வருகிறது-துடைக்கத்தான் ஆள் இல்லை-புதுச் சம்பளம் வாங்கப் போகிற தொகுதி எம்.பி கூட வந்து பார்க்கவில்லையாம்!

பதிவு செய்தவர்: சுகுமார்
பதிவு செய்தது: 25 Aug 2010 6:10 pm
1970 -80 களில் ஐம்பது, நூறு ரூபாய் கடனுக்கு மூன்று தலைமுறை மக்கள்(பாட்டன்,தகப்பன்,பிள்ளை)வட்டிக்கு வேலை செய்த கொடுமைகள் உண்டு. அசல் அடையவே வாய்ப்பில்லை. வேறு எங்கும் வேலை செய்யவோ வெளியூர் செல்லவோ அனுமதிக்க மாட்டார்கள்.ம்....(சு)தந்திரம் யாருக்கு????

பதிவு செய்தவர்: செல்வா
பதிவு செய்தது: 25 Aug 2010 4:14 pm
தமிழ் நாட்டில் அரசு உழியர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை எல்லாம்... பொது மக்களுக்கு கோவணம்தான் ......

கருத்துகள் இல்லை: