வியாழன், 26 ஆகஸ்ட், 2010

இலங்கை தமிழர்கள் நிலையை நேரில் ஆராய கிருஷ்ணா பயணம்

தமிழர் பிரச்னைகள் குறித்து அந்நாட்டு அரசுடன் ஆலோசனை செய்வதற்காக, வெளியுறவுத்துறை உயர் அதிகாரி விரைவில் இலங்கை செல்கிறார். தவிர, இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ இலங்கைக்கு நானே செல்லவுள்ளேன்."அப்போது, முகாம்களில் உள்ள தமிழர்களை விரைந்து மீள் குடியேற்றம் செய்வது குறித்து வலியுறுத்தப்படும். எனவே, அனைத்து கட்சி எம்.பி.,க்கள் குழுவை அனுப்ப வேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை' என, அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்தார்.
எஸ்.எம்.கிருஷ்ணா கூறியதாவது:போர் முடிந்ததும் மூன்று லட்சம் பேர், முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், தற்போதுள்ள தகவல்களின்படி, 30 ஆயிரம் முதல் 45 ஆயிரம் பேர் வரை மட்டுமே முகாம்களில் உள்ளனர். கடந்த ஜூன் மாதம் டில்லிக்கு ராஜபக்ஷே வந்தபோது கூட அவரிடம் தமிழர்கள் பிரச்னை வலியுறுத்தப்பட்டது.வடக்கு கிழக்கு பகுதிகளில் மீள் குடியேற்றம், வீடுகள் கட்டித்தருவது உள்ளிட்டவை விரைந்து செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டது. அப்போது இந்த டிசம்பருக்குள் அனைத்து நடவடிக்கைகளும் முடிந்துவிடும் என்று ராஜபக்ஷே உறுதியளித்தார்.தமிழர்களின் நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்தியா, 500 கோடி ரூபாயை அளித்தது. போர் முடிந்ததுமே மனிதாபிமான உதவிகளும் உடனே செய்யப்பட்டன. மருத்துவ வசதிகளும் செய்து தரப்பட்டன. 50 ஆயிரம் பேர் வரை மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர். செயற்கை கால் பொருத்தும் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. இதன் மூலம், ஆயிரத்து 400 பேர் வரை பயன் அடைந்துள்ளனர். கண்ணி வெடிகளை அகற்றுவதற்கென்றே இந்தியா தரப்பில் ஏழு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

விரைந்து கண்ணிவெடிகளை அகற்றுவதன் மூலம், மீள்குடியேற்ற நடவடிக்கை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.குறிப்பாக வவுனியா மன்னார் பகுதிகளில் விவசாயம், போக்குவரத்து ஆகியவை மீண்டும் துவங்கியுள்ளன. தவிர வீட்டின் கூரை கட்டுவதற்கு 7,900 டன் வரையிலான எடை கொண்ட பொருட்கள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு லட்சம் சிமென்ட் மூட்டைகள் அனுப்பி, வீடுகள் கட்டப்படுகின்றன. விவசாயத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதை, உரம் போன்ற பொருட்கள் தரப்பட்டு அங்கு விவசாய பணிகள் ஆரம்பிக்க உதவிகள் செய்யப்படுகின்றன. 50 ஆயிரம் வீடுகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, ராஜபக்ஷே வந்திருந்தபோது அறிவிக்கப்பட்டது.இதற்காக, ஆயிரம் வீடுகள் முதற்கட்டமாக கட்ட நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

காங்கேசன் துறைமுகம் புனரமைப்பு, துரையப்பா ஸ்டேடியம் மற்றும் யாழ்ப்பாணத்தில் கலாசார மையம் கட்டுவதற்கும் இந்தியா உதவுகிறது. தவிர பள்ளிகள், மருத்துவமனைகளை புதுப்பிக்கவும் உதவுகிறது.ராஜபக்ஷே வந்தபோது அரசியல் தீர்வு குறித்தும் 13வது சட்டத்திருத்தம் அமல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டது. இலங்கை என்பது இந்தியாவின் நட்பு நாடு. இரு நாடுகளுக்கும் பல்வேறு துறைகளில் உறவு இருந்து வருகிறது. அங்கு இந்தியா செய்து வரும் உதவிகளை செஞ்சிலுவைசங்கம், ஐ.நா., அமைப்புகள் உதவியோடு இந்தியா கண்காணித்து வருகிறது.

வெகுவிரைவில் வெளியுறவுத்துறையின் உயர் அதிகாரி இலங்øக்கு செல்கிறார். தவிர, நானே இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாதமோ இலங்கை செல்கிறேன். அப்போது, தமிழர்களின் மீள்குடியேற்றம், புனரமைப்பு நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தப்படும். எம்.பி.,க்களின் இங்கே தெரிவித்த கருத்துக்களும் தெரிவிக்கப்படும். இலங்கைக்கு ஏற்கனவே சென்றது அரசியல் கட்சிகள் அனுப்பிய குழுவே தவிர, அரசு தரப்பில் அனுப்பப்பட்ட குழு அல்ல. விரும்பும் எந்த கட்சி எம்.பி.,க்களும் செல்லலாம். எனவே, குழு அனுப்புவது குறித்து அரசை குறை கூற கூடாது.இலங்கையில் வசிக்கும் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் அரசியல் தீர்வு காண்பது குறித்தும் 13வது சட்டத்திருத்தத்தை அமல்படுத்துவது பற்றியும் இலங்கையை வலியுறுத்துவதற்கு இந்தியா உரிய முறையில் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு கிருஷ்ணா பேசினார்.
NRN - சென்னை,இந்தியா
2010-08-26 07:08:25 IST
போய் டிபன் காபி சாப்பிட்டு வாங்க. அதான் உங்களால முடியும்....
Bala - Tiruchirapalli,இந்தியா
2010-08-26 06:19:58 IST
இன்னும் எத்தனை அரசியல் வாதிகள் அதிகாரிகள் போவீர்கள் அய்யா. தமிழன் எத்தனை பேர் இன்னும் செத்துகொண்டிரு கிரான் என்று பார்கவா. எதற்கு எந்த வேஷம். முடிந்தால் செயலில் காட்டுங்க; முடியாவிட்டால் பேசாமலாவது இருங்க; உன் வீட்டில் உன் உறவுக்காரங்க அங்கே இருந்தால் அவர்கள் இந்த நிலையில் இருந்தால் என்ன செய்வையோ அதை செய் அல்லது செத்து மடி....
vaidya - sydney,இந்தியா
2010-08-26 06:01:45 IST
IF, govt of india looks only the best relationship they want o have with srilanka, the tamil speaking people"s life is very precarious.so the indian representaive have to mingle with the community to know the exact poosition. and sri lankanpresident must permit this occassion?...
vaidya - sydney,இந்தியா
2010-08-26 05:59:32 IST
krishna should take along with him some good represenctative of tamils from tamilnadu, to know exactly the serious and dangerous position of tamils and tamil speaking community.Mere a diplomatic visit and calls on the President will not solve this ethnic issue pending for the past 50/100 years,whether Dr kalaignar will show seirous interest or not is a seirous question?...
viswavinothan - london,யுனைடெட் கிங்டம்
2010-08-26 05:56:12 IST
தமிழனின் தலைவிதி தமிழன் கை‌யில்...
rahmathulla - qatar,இந்தியா
2010-08-26 04:47:26 IST
அடப் பாவிகளா யாரை கேட்டு கொடுத்திர்கள்? அத்தனையும் இந்திய மக்களின் ரத்தமடா,தமிழ் மக்களை நமது கடலிலும் இலங்கை மண்ணிலும் கொல்லுவதற்கும் கூலியாகவடா கொடுத்தீர்கள்,இன்னும் உங்கள் குடும்பத்தினரையும் கொடுப்பிர்கள. ?...
சௌந்தர் - சென்னை,இந்தியா
2010-08-26 03:52:11 IST
அப்பா, என்ன சீக்கிரமா நடவடிக்கை எடுக்குது நம்ம இந்திய அரசு ... போங்கடா .இன்னும் எத்தனை தமிழன் உயிருடன் இருக்கான் பாக்கவா...
கிராமத்தான் - saltlakecity,யூ.எஸ்.ஏ
2010-08-26 02:40:37 IST
ஆச்சர்யம்!!! இவ்வளவு செய்து வருகிறார்கள். இவைகளை தமிழக மக்களிடத்தில் முறையாக எடுத்துச்சொல்ல தெரியாத தமிழக congress காரன்கள் மகா முட்டாள்கள். தான் நேசித்த கட்சி தலைவனின் முழு உடம்பையும், கசாப்பு கடையிலே காணும் கரித்துண்டு போல, சுக்கு நூறாக சிதைத்து, துண்டு துண்டான தசைகளை சுட்டு கறியாக்கி, தாய், தந்தை, சொந்தம், நாடு என அனைத்தையும் விட்டு, தான் காதலித்து கல்யாணம் செய்த அன்பான கணவனை கடைசியாக பார்த்து அழ, முகத்தில் கூட ஒரு பிடி தசையில்லாமல், பார்த்து கட்டிபிடித்து அழுவதற்கு வழியில்லாமல், அந்த மாமனிதனின் உடம்பை சின்னாபின்னமாகி, உருத்தெரியாமல் சீரழித்து, உடம்புச் சதைகளைக் கூறு கூறாக கறியாக்கி பரப்பி வைத்திருந்தார்கள். சிறு பையனாக இருந்த ராகுல் தன் அப்பாவின் உடம்பை already சுட்டரித்துக் கறியாக்கி விட்டார்கள் என்று தெரியாமல் தன் அன்பு தகப்பனின் சாம்பளுக்குதான் சிதைமூட்டினார். இப்படிச் செய்த மக்களின் நல்வாழ்வுக்காக, இந்திய மக்களின் பணமாக இருந்தாலும், இவ்வளவு செய்து வரும் காங்கிரஸ் அரசிற்கும் (சோனியா, ராகுல் OK சொல்லாமல் இந்த govt -ல் எதுவும் நடக்காது என்பதை நினைவில் கொள்ளவும்), இவற்றை பரிந்துரை செய்தவர்கள் யாராய் இருந்தாலும் சரி, அவர்களுக்கும் நன்றி....
உணர்வில்தமிழன் - chennai,இந்தியா
2010-08-26 02:37:24 IST
அய்யா.....முழுநேர அரசியல்வாதிகளே(வியாதிகளே)........நீங்கள் அரசியல் பிழைப்பு நடத்துவதற்கு ஏன் அந்த அப்பாவி மக்களின் பேரை சொல்லி ஊரை ஏமாத்துகிறீர்கள் ? அவர்கள் ஏற்கனவே சொல்லமுடியாத பல துயரங்களில் சிக்கி தவிக்கிறார்கள்!ஏற்கனவே நீங்கள் போட்ட பல " அட்ரஸ் எழுதாத கடிதங்கள்",அக்கவுண்ட் இல்லாத பேங்கில் எழுதப்பட்ட "பிளான்க் செக்" மூலம் இலங்கைக்கு அளிக்கப்பட்ட "நல நிதி",புண்ணாக்கு வித்த காசில் கொடுக்கப்பட்ட "புனரமைப்பு நிதி" இப்படி பல கொடுமைகளை அவர்களுக்கு "அன்பளிப்பாக" கொடுத்துவிட்டு இன்னும் ஏன் இந்த வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுகிறீர்கள் ? உங்களின் "கூட்டணி தர்மத்தை" பாதுகாக்க ஈழ தமிழர்கள் என்ன "ஊறுகாயா" ?????? தமிழன் எங்கு இருந்தாலும் தேடி போய் அவனை இழிச்சவயானக்குவதே இந்த அரசியல் வாதிகளுக்கு பொழப்பாகி விட்டது ! தமிழன் என்று தன்மானத்துடன் தலை தூக்குவான் உங்கள் மத்தியில் ?...
சோமன் - தோஹா,கத்தார்
2010-08-26 01:20:29 IST
இவரு சொன்ன உடனே செஞ்சுட்டுதான் மறு வேலை பாப்பாரு. மஹிந்த. பாகிஸ்தான்ல பட்ட மாதிரி இங்கயும் படாம இருந்தா சரி. இந்திய அளவுல ரெண்டு கைப்புள்ளைங்க. ஒன்னு நம்ம காரைக்குடி காரரு, இன்னொன்னு இவரு... எவ்ளோ அடிச்சாலும் தாங்குவாங்க. ஏன்னா ரொம்ப நல்லவங்க... இலங்கையிலயும் பாகிஸ்தான்ல இருந்த மாதிரி ஒரு கட்ட துரை இருக்கான் சாமியோவ். உசாரு. உசாரு....
கண்ணன் - madurai,இந்தியா
2010-08-26 01:14:15 IST
நீங்க எல்லாம் போய் புடுங்கினது போதும். அவர்கள் உண்மை தமிழர்கள், நீங்கள் போய் தீயசக்தி கருணாநிதிக்கும் அவரது குடும்பத்திற்கும் சொத்து சேர்க்கும் வழியை பாருங்கள். உங்களுக்கு உண்மை தமிழர்களின் வலி தெரியாது. சொம்படித்து பழக்கப்பட்டவர்கள் நீங்கள். உண்மை திராவிடர் அவர்கள், அவர்களுக்கு எம் ஜி ஆர் மட்டுமே தெய்வம், நீங்கள் அல்ல...
இந்தியன் - சென்னை,இந்தியா
2010-08-26 00:00:56 IST
Please take your cell phone with you...

கருத்துகள் இல்லை: