வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

எனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை யாருக்கும் வரக் கூடாது-பள்ளி மாணவியின் கண்ணீர் கோரிக்கை

: எனக்கு பள்ளியில் ஆசிரியரால் நடந்த பாலியல் கொடுமை போல தமிழகத்தில் எந்தப் பள்ளிக்கூடத்திலும் என்னைப் போன்ற மாணவிகளுக்கு நேராமல் நீதிமன்றம்தான் தடுக்க வேண்டும் என்று ஆசிரியரின் செக்ஸ் வக்கிரத்தால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீதேவி மற்றும் தேவி ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். இருவரும் கண்ணீர் விட்டபடி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

திருவள்ளூர் மாவட்டம், கசுவா என்ற கிராமத்தில் சேவாலயா அறக்கட்டளையின் கீழ் மகாகவி பாரதியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு இலவசமாக படிப்பும், உணவும், தங்கும் வசதியும் அளிக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புற, கிராமப்புற ஏழை மாணவர்கள், ஏழை மாணவிகள், தாய் தந்தையை இழந்தவர்கள், ஆதரவற்றோர் படிக்கிறார்கள்.

நானும் ஏழையாக இருப்பதால் அதே பள்ளியில் 9-வது வகுப்பில் சேர்ந்தேன். என்னுடன் நன்றாக படிக்கும் தேவியும் படித்தார்.

ஒரு நாள் வராண்டாவை சுத்தப்படுத்த ஆசிரியர் சொன்னார். அப்போது துடைப்பம் எடுக்க ஆய்வுக்கூடத்திற்கு சென்றேன். அப்போது ஆசிரியர் என்னை கட்டிப்பிடித்து ஆபாசமாக நடந்து கொண்டார். உடனே அழுது கொண்டு அவரை தட்டிவிட்டு வெளியே ஓடிவந்து எனது தோழி தேவியிடம் தெரிவித்தேன்.

அவர் நம்பவில்லை. வராண்டாவை சுத்தப்படுத்திவிட்டு துடைப்பத்தை ஆய்வுக்கூடத்தில் வைக்கும்போது தோழியை வெளியில் நிறுத்திவிட்டு சென்றேன். அப்போது உள்ளே என்ன நடக்கிறது என்று கவனி என்று அவளிடம் சொல்லியிருந்தேன்.

நான் ஆய்வுக்கூடத்திற்கு துடைப்பத்தை வைக்க சென்றதும் மீண்டும் அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அதை எனது தோழி பார்த்தாள். அப்போதும் அவரின் செயல்பாட்டில் இருந்து விடுபட்டு வெளியே தப்பித்து வந்தேன்.

இதுகுறித்து தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தேன். ஆனால் அவர் அந்த ஆசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த சம்பவம் நடந்த பின்பு மாற்றுச்சான்றிதழ் வாங்க சென்றேன். மணிக்கணக்கில் காத்திருந்து பின்னர் வாங்கி வந்து வேறு பள்ளியில் படித்தேன்.

இதுகுறித்து போலீசிலும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடமும் புகார் தெரிவித்தேன். திருவள்ளூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு உள்ளது.

இந்த வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம் தலைமையில் போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். ஆசிரியர் கைது செய்யப்பட்டார். இப்போது பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வருகிறேன். இந்த வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த வழக்கு கேட்பாரற்று கிடக்கிறது.

என்னைப்போல இனிமேலும் அந்த பள்ளியில் பாலியல் கொடுமை எந்த மாணவிக்கும் நடக்காமல் இருக்கவேண்டும். எனவே நீதிமன்ற வழக்கை விரைந்து முடிக்க போலீசாரும் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.
பதிவு செய்தவர்: நீதி
பதிவு செய்தது: 27 Aug 2010 7:09 pm
கணக்கு கொஞ்சம் இடிக்குதே . அம்மாடி ஸ்ரீதேவி நீ எந்த வருஷம் ஒன்பதாம் வகுப்பு antha pallikoodathula serntha சொல்லு. இப்போ பட்டபடிப்பு முதலாம் ஆண்டுன்னா மூணு வருஷமா என்ன புடுங்கிட்டு இருந்த .

பதிவு செய்தவர்: Banu
பதிவு செய்தது: 27 Aug 2010 3:45 pm
பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியரே இவ்வாறு செய்தால் மாணவிகள் கூட படிக்கும் மாணவர்களுக்கு இது பாடமாக இருக்காதா? இந்த ஆசிரியர்கள் பாடத்தை ஒழுங்காக கற்றுக்கொடுக்காவிட்டாலும், ஒழுக்கத்தை கற்றுக்கொண்டால் போதும். மாணவர் தானாக படிப்பார்கள்.

கருத்துகள் இல்லை: