செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

இனி பணத்திற்கான போராட்டம்தான்;நெடியவன் குறூப்பும் கே.பி குறூப்பும் ஒருவரையொருவர்

தொடரும் மோதல்கள்: நெடியவன் ஒரு கொடியவன்  கே.பி சொல்கிறார்.
பிரபாகரன் மண்டையைப்போட்டவுடன் புலிகள் இதுவரை கட்டிக்காத்த கட்டுக்கோப்பு எல்லாம் காத்தாய் பறந்து விட்டது. புலிகளுக்குள் அடிபாடு தொடங்கி ஆளக்காள் குற்றம் சுமத்தத் தொடங்கிவிட்டான்கள். இதுவரை காலமும் தமக்கு எதிரானவர்களை துரொகிகள் என குற்றம் சுமத்திய புலிகள் தற்போது தங்களுக்கள் குத்துப்பட்டு ஆளையாள் துரொகிகள் என சொல்லத் தொடங்கி விட்டார்கள்.
நெடியவன் பணம் தந்திருந்தால் பிரபாகரனை காப்பாற்றியிருக்கலாம் என கே.பியின் பேட்டி டெய்லி மிரரில் வந்ததுடன: நெடியவன் கொடியவனாகி விட்டான். புலம்பெயர் புலிகளுக்கு  தலைசுத்தி அஸ்பிறின் குளிசை போடாத குறை. இன்னும் சிலர் கே.பி வைச்சுட்டாண்டா ஆப்பு என புலம்பி வருகின்றனர்.
இனி என்ன செய்யப்போகிறார்கள். காணுகிற இடங்களில் அடிபாடுகள்தான். கே.பி குறூப்  செடியவன் குறூப்  உருத்திரகுமாரன் குறூப் என அறிவுகெட்டுத்தனமாக மோதி பொலிசாருக்கு வேலை வைக்கப்போகிறார்கள். காணிப்பிரச்சினைக்கே வெட்டிக்கொள்கிற தமிழன் பணத்திற்காக ஆளையாள் அடிபட்டு கிடக்க மாட்டங்களா என்ன.
அத்தனையும் பொதுமக்கள் பணம். தமிழீழத்திற்கென சேர்த்த பணம். தற்போது நெடியவன் குறூப்பிடம் கிடக்கிறது. இனி பணத்திற்கான போராட்டம்தான். இணையத்தளங்களில் அதிர்ச்சியான தகவல்கள் இனி வெளிவரும்.
தமிழ்மக்கள் என்ன செய்யப்போகிறார்கள். என்ன செய்ய முடியும். சீட்டுக்காசு வட்டிக்காசு என சுத்துறவன் சுத்தியும் சுரணைகெட்டு இன்னும் சீட்டும் வட்டியும் என அலைகின்ற இந்த தமிழ்ச்    சமூகத்தை யாரும் சுத்தலாம். சோதிடச்சாமிகள், மருத்துவ சாமிகள், என எல்லொரும் போட்டிபோட்டு சுத்தலாம். ஏனெனில் அறிவு கம்மி. 30 வருடங்களாக தமிழீழம் எடுத்துத் தாறாத சொல்லி புலிகள் சுத்தவில்லையா?.
இப்போ கே.பி நடந்த தவறுக்கெல்லாம் நெடியவனை கொடியவனாக சுட்டிக்காட்டுகிறார். நெடியவன் தமிழ்ச்சமூகத்திற்கு மாபெரும் மகத்தான வேலையை செய்ததற்காக பாராட்ட வேண்டும். சூரியதேவனை முருகக்கடவுளுக்கு நிகரான தேசியத்தலைவரை கொல்வதற்கு ஏதோ தன்னால் முடிந்தளவிற்கு உதவியிருக்கிறார். பிரபாகரன் இருந்தால் தமிழர்களுக்கு பல கவலை. அந்தக் கவலைகளுக்கு முடிவு கட்டப்பட்டிருக்கிறது.
ஆக மொத்தம் கே.பியும் நெடியவனும் பிரபாகரனை இல்லாமல் செய்ததற்கு தமிழ்மக்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள்.
நெடியவன் குறூப்பும் கே.பி குறூப்பும் ஒருவரையொருவர் மோதிக்கொள்வதால் தமிழ்ச்சமூகத்திற்கு எந்தாவித நன்மையுமில்லை. இது யார் அதிகாரத்தை தொடர்ந்து வைத்திருப்பதற்கான போட்டியாகும். இவர்களுடைய மோதல்கள் முடிவடைந்து நிற்கும்போது தமிழ்மக்கள் புதிதாக வேறு ஒரு வழியில் பயணித்திருப்பார்கள்.

கருத்துகள் இல்லை: