மாத்தறையைச் சேர்ந்த 23 வயதான பெண்ணொருவர் தனது 'கணவர்' உண்மையில் ஒரு பெண் என்பதை 10 மாதங்களின் பின்னர் கண்டுபிடித்து அதிர்ச்சியடைந்ததுடன் இது தொடர்பாக பொலிஸில் புகார் செய்துள்ளார் ஆண் வேடமிட்டு ஏமாற்றியதாகக் கூறப்படும் குறித்த பெண்ணை தற்போது பொலிஸார் தேடி வருகின்றனர்.
அச்சந்தேக நபர் மாத்தறை திக்கெல்லையைச் சேர்ந்த 30 வயது பெண்ணாவார். அவர் தனது புகைப்படமொன்றை போட்டோஷொப் மூலம் ஆண் போன்று மாற்றிக்கொண்டு, பாதிக்கப்பட்ட யுவதிக்கு அனுப்பியதாகவும் தான் இராணுவத்திலிருந்து தப்பியோடிய ஒருவர் எனவும் அந்த யுவதியிடம் கூறியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த யுவதி கடந்த வருடம் நவம்பர் 29 ஆம் திகதி பெற்றோரின் சம்மதமின்றி சந்தேக நபரை திருமணம் செய்தாராம்.
ஆனால் சுமார் 10 மாதங்கள் வரை தனது கணவர் ஒரு பெண் என்பதை அவர் அறியாமல் இருந்தமைதான் ஆச்சரியமானது.
ஆனால், அண்மையில் ஒருநாள் தனது கணவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தபோது அவரின் சாரம் கழன்று விழுந்துவிட்டதாம். அப்போதுதான் தான் வாழ்க்கையில் மிக முக்கிய விசயங்களை இழந்திருப்பது மனைவிக்குத் தெரியவந்ததாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக