திருடுபோன துப்பாக்கி ராஜகணேஷ் தீட்சிதர் உள்ளிட்ட சிலர் வசம் இருப்பதாகத் தெரியவர,அவர்கள் அனைவரையும் அள்ளிச்சென்று விசாரித்தி ருக்கிறார். ஆனால் அ.தி.மு.க.வழக்கறிஞர் ஒருவர் தீட்சிதருக்கு ஆதரவாகவும் விசாரணைக்கு முட்டுக்கட்டையாகவும் இருக்கவே, இதனையும் மீறி விசாரித்ததில் தீட்சிதர் ராஜகணேஷ் திருட்டை ஒப்புக்கொண்டதை வீடியோவில் பதிவும் செய்திருக்கின்றனர்.
இந்நிலையில், ‘போலீஸாரின் விசாரணைக்கு அழைத்துச்சென்ற ராஜகணேஷ் தீட்சிதரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. அவரை ஒப்படைக்க வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகணேஷ் தரப்பில் ஒரு ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த மனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன் னதாகவே தங்கள் விசாரணையை முடித்துக்கொண்ட போலீஸார் அவரை உரிய நபர் ஒருவரிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு ஒப்படைத்திருக்கின்றனர். ஆனால் வே ண்டுமென்றே அவரை மறைத்து வைத்துக்கொண்டு ‘காணவில்லை’ என்றபடி நாடகமாடுகின்றனர் என்கிறது போலீஸ் தரப்பு.
இந்நிலையில், கோயில் சிற்சபையில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிகேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தி அதில் வெற்றி பெற்ற ஓதுவார் ஆறுமுகசாமி மற்றும் வழக்கறிஞர் ராஜு தரப்பில் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு ஒன்று மேலும் பரபரப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. அதாவது, “தீட்சிதர்களுக்கு எதிராக நானும், எனது வழக்கறிஞர் ராஜுவும் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். இப்போது தீட்சிதர் ஒருவர் திட்டம்போட்டு துப்பாக்கி ஒன்றை திருடியதாகச் சொல் கிறார்கள். எங்களைக் கொல்லக்கூட அந்த துப்பாக்கியை தீட்சிதர் திருடியிருக்கலாம். எனவே, எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு வேண்டும்’’ என்றபடி அந்த மனுவில் கு றிப்பிடப்பட்டிருக்கிறதாம்.
இதனைத் தொடர்ந்து மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான ராஜுவிடம் பேசினோம். “ஏற்கெனவே சிற்சபையில் தேவாரம் பாடப்போன ஆறுமுகசாமி ஓதுவாரை தீட்சிதர்கள் பலர் தாக்கியதோடு கையையும் முறித்தனர். போலீஸையே தீட்சிதர்கள் தாக்கினார்கள். கோயிலுக்குள்ளேயே பல மர்ம மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இது தொடர்பாக நாங்கள் பல்வேறு கிரிமினல் வழக்குகள் கூட தொடர்ந்திருக்கிறோம். தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கோயிலை தமிழக இந்து சமய அறநிலையத்துறையினர் கையகப்படுத்துவதற்கும் எங்கள் போராட்டங்கள்தான் காரணமாக இருந்தது. இந்த நிலையில் துப்பாக்கியை தீட்சிதர்கள் திரு டியிருப்பதாகக் கூறப்படுவது எங்களுக்கு பெரும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. ஒருவேளை, எங்கள் உயிரைக் குறி வைத்துக்கூட அவர்கள் சதித்திட்டம் ஒன்றைத் தீட் டியிருக்கலாம். எனவே, தீட்சிதர்களிடமிருந்து துப்பாக்கியைப் பறிமுதல் செய்யும் வரை ஆறுமுகசாமி ஓதுவாருக்கும், எனக்கும் பாதுகாப்பு கொடுக்கும்படி போலீஸ் உயரதிகாரிகளுக்கு மனு செய்திருக்கிறோம்’’ என்றார் அவர்.
தற்போது துப்பாக்கி திருடியதாக போலீஸார் சந்தேகப்படும் தீட்சிதரின் சகோதரர்கள் ஏற்கெனவே கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்த வழக்கறிஞர் ஒருவரின் பையைத் திருடியவர்கள் என்ற பேச்சும் ஊருக்குள் அடிபடுகிறது. துப்பாக்கி திருடுபோன சம்பவம் குறித்து தீட்சிதர்கள் சிலரிடம் பேச முயற்சித்தோம். யாரும் பேச முன்வரவில்லை. போலீஸாரோ, “பிரச்னை நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டதால் நாங்கள் எதுவும் பேச முடியாது’’ என்று முடித்துக்கொண்டனர்.
பெங்களூருவில் உள்ள லட்சுமிபதியிடமே தொலைபேசியில் கேட்டோம்.
“அந்தத் துப்பாக்கியில் ஐந்து புல்லட்கள் லோட் செய்யப்பட்டிருந்தன. யாராவது விஷமிகள் கையில் அந்தத் துப்பாக்கி கிடைத்தால் விபரீதமாக ஏதாவது நடந்துவிடுமே என்று பயந்துபோய் உடனே சிதம்பரம் நகர காவல்நிலையத்திற்குச் சென்று புகார் செய்தேன். அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. நான் பெங்களூருவுக்கே திரும்பிச் சென்று மறுபடியும் எனது வழக்கறிஞருடன் வந்து போலீஸாரிடம் நிலைமையை விளக்கி புகார் கொடுத்த பிறகுதான் வழக்கே பதிவு செய்தார்கள். தீட்சிதர்களிடம், ‘என் து ப்பாக்கியை எடுத்திருந்தால் கொடுத்துவிடுங்கள்’ என்று கண்ணீர்விட்டு அழுதேன். ஆனால் யாரும் மனமிரங்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக