மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் உதவி நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார் அவர் உடனடியாக தமது பொறுப்பை ஏற்றுக் கொள்ளவுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ள நிலையிலேயே சவேந்திர சில்வாவின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான முன்னாள் பிரதி வதிவிடப்பிரதிநிதி பந்துல ஜயசேகரவுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதியுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்கள் குறித்து உரிய விளக்கங்களை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுவதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரின் போது சவேந்திர சில்வா தலைமையிலான படையினரே மன்னார், நாச்சிக்குடா, பூநகரி, கிளிநொச்சி, ஆனையிறவு, விஸ்வமடு, புதுகுடியிருப்பு ஆகிய இடங்களை கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே தெரிவித்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக