செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

திமுக கூட்டணியை யாரும் விமர்சித்துப் பேசக் கூடாது-குலாம் நபி ஆசாத் எச்சரிக்கை

தமிழகத்திலும், தேசிய அளவிலும் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். இதுதொடரும். இதை விமர்சித்து காங்கிரஸார் யாரும் பேசக் கூடாது. அப்படிப் பேசினால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கட்சி பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் எச்சரித்துள்ளார்.

திமுகவையும், அதன் ஆட்சியையும், அதன் செயல்பாடுகளையும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனும், கார்த்தி சிதம்பரமும் தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார்கள். இதில் இளங்கோவன் பட்டவர்த்தனமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இதனால் அதிருப்தி அடைந்த முதல்வர் கருணாநிதி, இளங்கோவனின் பேச்சு கூட்டணிக்கு வலிமை சேர்ப்பதை விட வலியையே கொடுக்கும் எனக் கூறியுள்ளார்.இந்த நிலையில், இந்தப் பேச்சுக்கள் குறித்து காங்கிரஸ் மேலிடம் எதுவும் தெரிவிக்காமல் இருந்து வந்தது. தற்போது குலாம் நபி ஆசாத் வாய் திறந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், திமுகவுடன் தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இது தொடரும். கூடடணிக்கு எதிராக பேசுவதற்கு எந்த தனி நபருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் மேலிடம் அனுமதியோ, அங்கீகாரமோ அளிக்கவில்லை.யாருக்காவது ஏதாவது பிரச்சினை என்றால் அதை உரிய இடத்தில், உரிய நேரத்தில் எழுப்ப வேண்டும். மாறாக பொது இடங்களிலோ அல்லது பத்திரிக்கை, டிவி மூலமாகவோ எழுப்பினால் அதை பொறுத்துக் கொள்ள முடியாது.

எனவே இதுபோன்று கூட்டணிக்கு எதிரான பேச்சுக்கள், அறிக்கைகளை கட்சியினர் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.கூட்டணிக்கு எதிரான கருத்துக்கள் கட்சி விரோத நடவடிக்கையாக பார்க்கப்படும்.கட்சி மேலிடத்தைத் தவிர வேறு யாரும் கூட்டணி குறித்துப் பேசக் கூடாது, பேச முடியாது என்றார் ஆசாத்.

யாருடைய பெயரையும் ஆசாத் குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவரது எச்சரிக்கை, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்குத்தான் என்று தெரிகிறது.

பதிவு செய்தவர்: ஜெயா
பதிவு செய்தது: 24 Aug 2010 9:20 am
அப்போ நான் அந்த டுபாக்கூர் இளங்கோவன் இப்படி தி மு க வுக்கு குடைச்சல் கொடுக்க கொடுத்த பணத்த ரெண்டு தட்டு தட்டி திருப்பி வணங்கிட வேண்டியது தான். நான் செலவு பண்ணி கோவை மற்றும் திருச்சியில கூட்டிய கூட்டமும் வேஸ்ட். சசி பெட்டிய எடுத்துக்கிட்டு கொடநாடு கெளம்புவோம்

கருத்துகள் இல்லை: