வியாழன், 26 ஆகஸ்ட், 2010

5 நீதிபதிகள் கையும், களவுமாக பிடிபபட்டனர்.தேர்வில் காப்பி அடித்தநீதிபதிகள் யார் ? யார்

ஐதராபாத்: சட்டத்துறை தொடர்பான தேர்வில் காப்பி அடித்த 5 நீதிபதிகள் கையும், களவுமாக பிடிபபட்டனர். தொடர்ந்து 5 பேரையும் சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதி , நேர்மை ,காக்க வேண்டிய நீதிபதிகள் இப்படி நடந்து கொண்ட விதம் ஆந்திரா மாநில சட்டத்துறைக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருக்கிறது.
மாஸ்டர் ஆப் லா ( எம். எல்.எம்., ) தேர்வு வாரங்கல் மாவட்டத்தில் உள்ள கக்காத்தியா பல்கலை.,யில் நடந்தது. இந்த தேர்வில் வக்கீல்கள், நீதிபதிகள் பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்வு அறையில் இருந்த 5 நீதபதிகள் பிட் அடிப்பதற்காக பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகத்தை தேர்வுத்தாள் கீழ்புறம் வைத்து காப்பி அடித்தனர்.
 
நீதிபதிகள் மல்லுக்கட்டினர்: தேர்வு அறைக்கு திடீரென வந்த கல்வி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 5 நீதிபதிகள் காப்பி அடித்து கையும் , களவுமாக பிடிப்பட்டனர். வினாத்தாள் மற்றும் பிட் அடிக்கும் புத்தகத்தை அதிகாரிகள் பறிக்கும்போது அதனை கொடுக்காமல் நீதிபதிகள் மல்லுக்கட்டினர். தொடர்ந்து அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் தேர்வு ஹாலில் பரபரப்பாக காணப்பட்டது.

நீதிபதிகள் யார் ?  யார் ?  : காப்பி அடித்த நீதிபதிகள் யார் என்ற விவரம் வருமாறு: அஜீத்சிம்மாராவ்( சீனியர் சிவில் ஜட்ஜ்) , விஜயேந்திரரெட்டி ( செகண்ட் அடிசினல் டிஸ்டிரிக்ட் ஜட்ஜ் ) , கிஸ்தாப்பா ( சீனியர் சிவில் ஜட்ஜ் ஆனந்த்பூர்) , சீனிவாச்சாரி ( சீனியர் சிவில் ஜட்ஜ் , பப்தாலா), ஹனுமந்தராவ் ( அடிசினல் ஜூனியர் சிவில் ஜட்ஜ் , வாரங்கல்) . இந்த 5 பேரும் காப்பி அடித்த விவகாரத்தின் முதல்கட்ட அறிக்கையை பெற்று ஆந்திர ஐகோர்ட் நீதிபதி நிசார்முகம்மது , நீதிபதிகள் 5 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இந்த விஷயம் குறித்து முழு விவரத்தை தமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். நீதி,நேர்மை , கண்ணியம், ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டிய நீதிபதிகள் பிட் அடித்த விவகாரம் குறித்து ஆந்திராவில் ஊர் சிரிக்கிறது . நீதிபதிகள் தேர்வு அறையில் நடந்து கொண்ட விதம் வீடியோ ஆதாரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
ilaya raja - andaman,இந்தியா 2010-08-26 17:29:39 IST
சரியா சொன்னீங்க இந்திராஜீத் ...படிச்ச பட்டத்தை திரும்ப வாங்க வேண்டும்.......
செல்வராஜ் சாமுவேல் - Muscat,ஓமன் 2010-08-26 17:28:15 IST
நீதிபதிகள் மட்டும் தான் நீதி நேர்மை ஒழுக்கம் போன்றவைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது இல்லை. ஒவ்வொரு மனிதனும் இவைகளையெல்லாம் கடைபிடித்தால் தான் நம்ம நாடு வல்லரசாக முடியும்....
ஷரன் - பெங்களூர்,இந்தியா 2010-08-26 17:13:16 IST
இவங்க செஞ்ச தப்புக்காக நீதிய இழுக்கிறது நியாயம் இல்ல. ஏன்னா இவங்களுக்கும் நீதிக்கும் சம்பந்தம் இல்ல...
செல்வகுமார் - சென்னை,இந்தியா 2010-08-26 17:10:31 IST
மக்கள் :நாட்டமை நீதி செத்து போச்சு.............. நாட்டமை: சாவும் வரை தூக்கில் இடுங்கள்....
kannan - singapore,சிங்கப்பூர் 2010-08-26 17:04:26 IST
நாட்டாமை தீர்ப்பை மாதி சொல்லு....இன்னும் பாசே பண்ணலடா .......
nachi - chennai,இந்தியா 2010-08-26 17:02:44 IST
Super machi ippidiye pona nadu urupadum...
S.Senthil Kumar - Dubai,இந்தியா 2010-08-26 16:55:56 IST
How we can expect justice from these people?...
ஜாலி நண்பர்கள் - துபாய்.,இந்தியா 2010-08-26 16:36:19 IST
சூப்பர் நியூஸ் . வாழ்கையில் சந்தோசம்தான் முக்கியம். மக்களே சிரிங்க. நம்மாள என்ன செய்ய முடியும் ? இவர்களிடதன் இந்திய சட்டம் !...
நாராயணன் - Chennai,இந்தியா 2010-08-26 16:32:04 IST
Except ponni and amar from quatar and india respectively others really understand the situation. so the ilegal stupid judges need to be punished otherwise they will ask our daughters and wife for their judgements. Oneday they may have enough money in hand. So remember our woman and girls so punishments should be severe....
புல்லட்டு பாண்டி - devi,இந்தியா 2010-08-26 16:22:50 IST
இவர்களுக்கு தற்காலிக பனி நீக்கம் சரியானது அல்ல. நிறந்தர பனி நீக்கம் என்னை போலே பலருக்கு சந்தோசத்தை தரும் because we are all true indian...
H.Lakshmi narayanan - Chennai,இந்தியா 2010-08-26 16:19:45 IST
Are they not shamed for their mistakes, if supreme court not punish them severely others also follow in near future. They may think that no one is watching their mistakes. Atleast they should not reapper for those exams in future....
லோடுக்கு - rmd,இந்தியா 2010-08-26 16:18:53 IST
சூப்பர்டா மக்கா நான் நினைக்கிறன் இவர்கள் இதற்கு முன்னும் இப்படிதான் காப்பி அடித்து இந்த இடத்தை பிடித்து இருக்கின்றனர்....
தங்கமணி - தஞ்சாவூர்,இந்தியா 2010-08-26 16:17:47 IST
இவர்கள் டிஸ்மிஸ் செய்ய பட வேண்டும் . அப்போதுதான் அவர்களுக்கு பயம் வரும் ....
சு.சித்ரா - மதுரை,இந்தியா 2010-08-26 16:05:20 IST
என்ன தான் புத்திசாலி இருந்ததாலும் பல்லு விளக்கைல இலுச்சவாயன தான் இருக்கனும், இது எல்லாத்துக்கும் பொருந்தும்....
நாதன் - சிபுமலேசியா,இந்தியா 2010-08-26 16:02:16 IST
இவர்கள் எல்லாம் உயர் பதவிக்கு சென்று என்ன செய்வார்கள்? பொறம்போக்குக்கு துணை போவான் இந்த பொறம்போக்கு...
சு. சத்திய arunachalam - திருநெல்வேலி,இந்தியா 2010-08-26 16:00:49 IST
சாமிக்கு அடுத்து டாக்டர்ஸ், நீதிபதிகள் தான். அட பாவிகளா, இங்க ரெண்டு பயலுகளும் அடிக்கிற கூத்து கலாட்ட தாங்க முடியலை டா சாமீ........... சீக்கிரம் அடுத்த சுனாமியை அனுப்பி வை சாமி....
KARUBBIAH - SINGAPORE,இந்தியா 2010-08-26 15:57:49 IST
உலக அரங்கில் இந்தியாவின் மானம் காற்றில் பறக்கும் செய்தி. இவர்களைப்போல் கீழ்த்தரமான நீதிபதிகளை உடனடியாக பதவி நீக்கம் செய்து , இந்தியாவில் நீதி செத்துவிட இல்லை என்பதை வெளிப்படுத்துங்கள் . நாடு நாசமா போறதுக்கு அரசியல்வாதி மட்டும் காரணம் இல்லை.இந்த மாதிரி மட்டமான நீதிபதிகளும் ,வக்கீல்களும் , காவல் துறையும் முக்கிய காரணம். ஆண்டவன் கருணையால்தான் இன்னும் இந்தியாவில் மக்கள் வாழ்கிறார்கள் .வாழ்க என் பாரத நாடு....
செந்தில் குமார் - கோயம்புத்தூர்,இந்தியா 2010-08-26 15:48:00 IST
ஆர்டர் ஆர்டர் ...... தி கோர்ட் இஸ் அட்ஜெண்டு......... வல்லரசு நாட்டுல இதெல்லாம் சாதாரணமப்பா......... இதெல்லாம் நாளைக்கு வரலாறுல வரும்.... இந்த ஜட்ஜ் க்கு எல்லாம் சிலை வைப்பாங்க. ஸ்டூடெண்ட்ஸ் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க........ ஒரே கஷ்டமப்பா..............
வி.கே.லோகநாதன். - REDHILLSவிளாங்காடுபாக்கம்,இந்தியா 2010-08-26 15:47:48 
நீதிபதிகளின் பதவிகளை ரத்து செய்து அவர்களை ஐந்து ஆண்டுகள் வரை நீதிபதியாக இருக்க தகுதியற்றவர்களாக ஆணை பிறப்பிக்க வேண்டும்.இந்த வயதில் காப்பியடிக்கும் இவர்கள் எப்படி வழ்க்கறிஞர்களாக வந்தது கேள்விக்குறியே? உச்சநீதிமன்றம் முடிவு செய்யவேண்டும்...
PALANIAPPAN - MADURAI,இந்தியா 2010-08-26 15:44:29 IST
அரசியல்வாதிகளை,அல்லது மதத்தை,அல்லது ஜாதியை காரணம் காட்டி வெளியே வந்து விடுவார்கள்....
கே - பெங்களூர்,இந்தியா 2010-08-26 15:41:12 IST
என்ன ஒரு வில்லத்தனம்? கருப்பு கோட் மாட்டினா இவனுங்களுக்கெல்லாம் பெரிய .....ன்னு நினைப்பு.. வக்கீல்களுக்கும் சேர்த்து தான்......
raghavan - dindigul,இந்தியா 2010-08-26 15:33:29 IST
பணம் பெறாமல் நீதிபதிகளை நியமிக்கவும்...
தமிழன் - Chennai,இந்தியா 2010-08-26 15:16:37 IST
ஆந்திராவில் எல்லாம இப்படி தான் !!!!...
Karthik - India,இந்தியா 2010-08-26 15:15:22 IST
மக்களே நம்மல்லாம் இது வரைக்கும் வாழ்கை இல் பிட் அடிக்காத மாதரி பேசுறீங்க ...... எக்ஸாம் ன்னு வந்துட்டா எல்லாரும் ஒன்னு தான் ... :) என்ன இதை கொஞ்சம் பெருசா பேப்பர் ல போட்டு அசிங்க படுத்தீட்டாங்க .........
சக்தி - கோவை,இந்தியா 2010-08-26 15:12:50 IST
என்ன நாடு இது !!! இன்னொரு ஹிட்லர் பிறந்து இவனுகளை ஒழிக்கணும்....
INDRAJIT - BENARES,இந்தியா 2010-08-26 15:04:02 IST
இந்த மாதிரி அயோக்கியத்தனம் செய்யும்போது மட்டும், ஜாதி, மத, வேறுபாடே இல்லாம ஒத்துமை வந்துருது ? படிச்ச பட்டத்தைப் பிடுங்கிடனும் !...
தமிழ்நேசன் - மஸ்கட்,ஓமன் 2010-08-26 15:03:46 IST
நீதிபதிகள் லஞ்சம் வாங்கும்போது, இது ஒன்றும் பெரிய தப்பு இல்லையே ?...
இசக்கி - தேவகோட்டை,இந்தியா 2010-08-26 14:57:33 IST
ஐவரும் வேலை நீக்கம் செய்யப்படவேண்டும்...
மல்லிக் - துபாய்,இந்தியா 2010-08-26 14:56:39 IST
நிர்வாகம் படித்தவர்கள் = மக்கள் சேவை + சம்பாதிப்பது கொஞ்சம் லஞ்சம் வாங்குவது, மருத்துவம் படித்தவர்கள் = உயிர் காப்பது + நிறைய சம்பாதிப்பது , தொழில் கல்வி படித்தவர்கள் = மக்களுக்கு தேவையான எல்லாவிதமான வசதிகளும் செய்துகொடுப்பவர்கள் + சம்பாதிப்பது சட்டம் படித்தவர்கள் = பொறுக்கித்தனம்,ரௌடித்தனம், வெட்டுகுத்து,சட்டம் படித்து சட்டத்தையே மதிக்காதது,உண்மையை பொய்யாக்குவது அப்பாவியை மாட்டவைப்பது நீதிக்காக சென்றவர்களை நிதி இல்லாமல் ஆக்குவது ஏன் என்று இன்று தான் விளங்கியது. மல்லிக்,துபாய்...
kumar - muscat,பனாமா 2010-08-26 14:51:19 IST
அட விடுங்கப்பா இங்க யார் பிட் அடிக்காதவன் நீதி துறையில் இதெல்லாம் சாதாரணம் அப்பா...
Sam - Otttwa,கனடா 2010-08-26 14:47:43 IST
Thats sad....
Divaharan - Tirunelveli,இந்தியா 2010-08-26 14:34:16 IST
இவர்கள் எழுதும் தீர்ப்புகளும் காப்பி அடிக்கபட்டவைகள் தானா?...
R.C.A. Selvin. - Tuticorin.,இந்தியா 2010-08-26 14:32:07 IST
Compared to those 5 judges and justice Dinakaran,Our tamil people is still having Corruption King.For Example R.V.R.Deenadayalan who served as Chief Judicial Magistrate in kadalur, used to destroy records in her custody. Then where is justice. P.D.Dinakaran is a competent Judge, If he supported our ruling government he may be rewarded....
Amar - APK,இந்தியா 2010-08-26 14:29:37 IST
நம்மள மாதிரி அவங்களும் ஒரு மாணவன் தான. இத பெருசு படுத்தாதீங்க. வேற வேலை இருந்த போய் பாருங்க. பெரிய கேஸ் (கசாப்) எல்லாம் விட்ருவீங்க. இந்த மாதிரி சின்ன சின்ன கேஸ் எல்லாம் பெருசு படுத்துவீங்க......
க.ஆறுமுகம் - புதுக்கோட்டை.VENNAVALKUDI,இந்தியா 2010-08-26 14:19:26 IST
அய்யா நீங்க நல்ல சோறு சாப்பிட்டா இந்த புத்தி வருமா?...
suresh - புனே,இந்தியா 2010-08-26 14:04:36 IST
முதலில் suspend என்ற வார்த்தையை எடுத்துவிட்டு டிஸ்மிஸ் என்று போடா வேண்டும் . தீர்ப்பு சொல்வதற்கு லஞ்சம். இவர்களெல்லாம் சட்ட துறையில் இருந்து என்ன செய்ய போகிறார்கள் ....
raghu - madurai,இந்தியா 2010-08-26 13:57:09 IST
நீதிபதியே காப்பி அடிக்கிறது ரொம்போ நல்ல விசயந்தான. இதுக்கு முன்னாடி வக்கீலா இருந்தப்போ பொய் பிராடு பித்தலாட்டம் செய்து தான் இந்த பதவிக்கு வந்திருப்பான். சபாஷ் நல்ல நாடு. நல்ல நீதி அரசர்கள்...
mano - nz,நிக்கர்குவா 2010-08-26 13:45:32 IST
இவனுகளை எல்லாம் என்ன பண்ணினாலும் தகும்.... மக்களின் உச்ச நம்பிக்கையே நீதிமன்றம் தான்..... ஆனால், நீதிபதிகளே இப்படி இருந்தால், மற்ற இடங்களில் எப்படி இருக்கும்.....! எப்படியாவது லஞ்சம் கொடுத்தாவது வெளியே வந்து விடுவார்கள்....... மக்களின் கொஞ்ச நம்பிக்கையையும் இவர்கள் தவிடு பொடி ஆக்கி விட்டார்கள்...... கண்டிப்பாக, தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது..........
சேகர் - chennai,இந்தியா 2010-08-26 13:16:16 IST
இவர்களில் யாராவது தலித் இருந்தால் அவர்களுக்கு promotion கொடுத்து விடலாம். ஏனெனில் தினகரன் - கர்நாடக உயர் நீதி மன்ற நீதிபதிக்கு ஒரு தண்டனை இல்லை. அவர் இப்பொழுது மற்றொரு ஸ்டேட் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப‌ட்டிருக்கிறார். இவருக்கு தண்டனை கொடுத்துவிட்டு பின்னர் இந்த 5 நீதிபதி தண்டனை பற்றி யோசிக்கலாம்....
ஜெயக்குமார் - ஸ்ரீவில்லிபுத்தூர்,இந்தியா 2010-08-26 13:03:10 IST
இவனுங்கள மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு ஜட்ஜா போடவேண்டியதுதான்....
Dinesh - manama,பஹ்ரைன் 2010-08-26 12:33:31 IST
These 5 peoples brought a very bad name on judiciary, and they should be punished severly....
REVATHI - CHENNAI,இந்தியா 2010-08-26 12:28:36 IST
sad news...
சூர்யா - Mangalore,இந்தியா 2010-08-26 12:21:33 IST
நீதித்துறை பற்றி யார் பேசினாலும் தவறு என்ற மனோபாவம் இனிமேலும் கூடாது. இவர்கள் ஒன்றும் வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. தன்னை முழுமையாக சுயபரிசோதனை செய்துகொள்ள நீதித்துறை தயாராக வேண்டும். நாடு முழுவதுமுள்ள கயவாளி நீதிபதிகளை களையெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாமான்ய ஜனங்களின் கடைசி நம்பிக்கையையும் பொசுக்கி விடாதிர்கள். அரசியல்வாதிகளை மட்டும் குற்றம் சொல்லாதீர் ! கண்காணிப்பில்லா பிள்ளை கயவாளி ஆவதுபோல! , எல்லா துறைகளும் கடுமையாக கண்காணிக்கப்பட வேண்டும். இல்லையேல் வல்லரசாவது போய், வல்லூறுகளின் அரசாகிவிடும் இந்தியா.!...
தமிழன் - அபுதாபி,ஐக்கிய அரபு நாடுகள் 2010-08-26 12:12:58 IST
இப்போ ஆந்திரா மட்டும் இல்ல மொத இந்தியாவே சிரிக்கிது,,,,,,,, ஹைய்யோ ஹய்யோ..... எவ்ளோ பேருக்கு தண்டனை குடுத்திருப்ப‌ாங்க. இப்போ இவங்களுக்கு தக்க தண்டனை குடுக்கணும்... அப்போ தான் மற்ற பிராடு நீதிபதிகளும் பயப்படுவாங்க.... என்ன ஒரு வில்லத்தனம் ...... சின்னபுள்ள தனமா இருக்கு,,,,,,,,...
பொன்னி - தோஹா,கத்தார் 2010-08-26 12:12:03 IST
இந்த மாதிரி செய்திகளை பதிவு செய்து இந்தியாவின் மானத்தை கப்பல் ஏற்றாதீர்கள்....
aranga muralidharan - kolkata,இந்தியா 2010-08-26 12:05:51 IST
People are having hopes only on judiciary as it seems to be less dishonest comparatively when compared to other sectors. Now it looks that they have also joined mainstream of cheating and misuing their positions. Let God save us...
தேவன் - singapore,சிங்கப்பூர் 2010-08-26 11:58:02 IST
எல்லாம் விதி. யாரை தான் நம்புவதோ பேதை உள்ளம்...
thapasi - chennai,இந்தியா 2010-08-26 11:52:52 IST
ஐவரும் வேலை நீக்கம் செய்யப்படவேண்டும்...
thapasi - chennai,இந்தியா 2010-08-26 11:47:51 IST
தர்மம் சாராத செகுலர் கல்வி தான் இந்த நிலைக்கு காரணம். சுதந்திரம் பெற்றோம் நாம் ஸ்வதர்மம் பெறவில்லை . செகுலர் என்ற பெயரில் பெரும்பான்மையினரின் வாழ்க்கை தரம் பாதிக்கப்பட்டுள்ளது .இதனால் தான் நேர்மையற்ற தன்மை, லஞ்சம் சுயநலம் எய்ட்ஸ் நோய் உருவாகி உள்ளது . எனவே பாரதி கூறிய " கஞ்சி குடிப்பதிர்கில்லா, அதன் காரணம் இவையென்ற அறிவுமில்லா " வரிகள் நினைவு கூறத்தக்கது...
இம்சை அரசன் - ஈரோடு,இந்தியா 2010-08-26 11:44:00 IST
இந்த பன்னாடைங்களா ஸ்கூல்ல கொண்டுபோய் விட்டு, திரும்பவும் ஒன்னாங்கிலாஸ்லேர்ந்து படிக்கச் சொல்லனும். அங்கயும் பிட்டு அடிக்காம பாத்துக்க 5 (நல்ல) நீதிபதிகள் கொண்ட குழுவ அமைச்சு கண்காணிக்கணும். இதுதான் இந்த நாட்டமையோட தீர்ப்பு....
கோபால் திருச்சி - வோறையூர்,இந்தியா
2010-08-26 11:37:33 IST
சூப்பர் நாடு, சூப்பர் நீதிபதி. சூப்பர்...
ஹரே ராம் - சென்னை,இந்தியா
2010-08-26 11:32:50 IST
இரண்டு அல்லது மூன்று மாதம் பின்பு இவர்களை யாவரும் மறந்துவிடுவார்கள். அவர்களும் யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்து பணிக்கு வந்து விடுவார்கள்....

கருத்துகள் இல்லை: