படத்தின் நாயகி திவ்யா ஸ்பந்தனாவின் கால்ஷீட் சொதப்பலால் சிங்கம்புலி படம் தள்ளிப்போகிறது. நடிகர் ஜீவா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் சிங்கம்புலி. இப்படத்தில் மீன் வெட்டுபவராகவும், வக்கீலாகவும் ஜீவா நடிக்கிறார். இரண்டு ஹீரோ என்றால் இரண்டு ஹீரோயின் இருக்க வேண்டுமே? ஒருவர் திவ்யா ஸ்பந்தனா. இன்னொருவர் ஹனிரோஸ்.
இவர்களில் திவ்யா ஸ்பந்தனாவால்தான் சிங்கம்புலி தியேட்டருக்கு வருவது தடைபட்டு வருகிறதாம். எப்போதும் சண்டை படங்களில் நடிப்பதையே விரும்பும் திவ்யா ஸ்பந்தனா அலைஸ் திவ்யா தொடர்ந்து கால்ஷீட் சொதப்பல் செய்து வருகிறார். இதனால் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போகிறது என்று புலம்புகிறது சிங்கம்புலி வட்டாரம். <
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக