புதன், 25 ஆகஸ்ட், 2010

மலையாள நடிகர்கள கலையை மதிக்கத் தெரியாதவர்கள் முதல்வர் அச்சுதானந்தன்


கமல்ஹாசனுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல-மலையாள நடிகர் சங்கம்
நடிகர் கமல்ஹாசனுக்கு நாங்கள் எதிரிகள் அல்ல. கமல்ஹாசனுக்கு கேரள அரசு நடத்திய பாராட்டு விழாவை நாங்கள் புறக்கணித்ததற்கு காரணம் வேறு. ஆனால் எங்களை அந்த விழாவில் கடுமையாக விமர்சித்துள்ள முதல்வர் [^] அச்சுதானந்தனின் பேச்சு கண்டனத்துக்குரியது என்று மலையாள நடிகர் சங்கமான அம்மா கூறியுள்ளது.

சமீபத்தில் திருவனந்தபுரத்தில் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. கேரள அரசு இந்த விழாவை நடத்தியது. ஆனால் இந்த விழாவில் மலையாள நடிகர் சங்கத்தினர் கலந்து கொள்ளவில்லை. புறக்கணித்து விட்டனர். மலையாள சினிமாவில் 50 ஆண்டுகளைத் தாண்டிய பல நடிகர்கள் இருக்கும்போது கமல்ஹாசனை கூட்டி வந்து விழா எடுப்பதா என்று அவர்கள் கூறியிருந்தனர்.

இதையடுத்து விழாவில் பேசிய முதல்வர் அச்சுதானந்தன் மலையாள நடிகர் சங்கத்தினரையும், நடிகர்களையும் கடுமையாக விமர்சித்தார். உண்மையான கலையை மதிக்கத் தெரியாதவர்கள் மலையாள நடிகர்கள் என்றும் காட்டமாக கூறியிருந்தார்.

இதற்கு அம்மா கண்டனம் [^] தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முதல்வர் அச்சுதானந்தன் பேச்சு தற்போது கமலஹாசன் ரசிகர்களிடையேயும், தமிழர்களிடையேயும் எங்களை எதிரியாக்கி உள்ளது. நாங்கள் கமல்ஹாசனுக்கு ஒருபோதும் எதிரியல்ல. முதல்வர் தனது பேச்சை கடுமையாக்கி கொண்டதால் தற்போது தமிழ் ரசிகர்கள் [^] மத்தியில் கொதிப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

மலையாள நடிகர்கள் கமல்ஹாசனின் சகோதரர்கள். எதிரிகள் அல்ல. கமல்ஹாசனுக்கு நடத்தப்படும் பாராட்டு விழா குறித்து கேரள அரசு மலையாள நடிகர்களுடன் கலந்து ஆலோசனை செய்யவில்லை. மேலும் விழாவிற்கும் முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இதனால்தான் புறக்கணிப்பு செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

பதிவு செய்தவர்: ரசிகன்
பதிவு செய்தது: 25 Aug 2010 7:31 pm
நாயே! இளையராஜா, கமல், எஸ்பி பால சுப்ரமணியம் போன்றவர்களை பற்றி பேச உனக்கு என்னடா அருகதை இருக்கிறது!! பண்ணி பயலே!!!

பதிவு செய்தவர்: உண்மை
பதிவு செய்தது: 25 Aug 2010 6:40 pm
இளையராஜா, கமல், எஸ்பி பால சுப்ரமணியம் இவர்கள் எல்லாம் பாராட்டு விரும்பிகள். நாங்கள் என்ன சாதித்துவிட்டோம் இந்த துறை ஒரு கடல் போல அதில் நாங்கள் ஒரு துளித்தான் அப்படி இப்படின்னு சொல்லி மட்டையா மடங்கி விரிச்சிகமா விரியுவானுங்க. உண்மையில் இவனுங்க தமிழ் நாட்டை தாண்டி உலகத்தரத்தில் எதுவும் சாதிச்சதா தெரியவில்லை. ஆனால் இவனுங்க உலகளவில் சாதிச்சதா நினைச்சிக்கிட்டு இருக்கானுங்க. அப்படி நினைத்து மக்கள் இவர்களை கொண்டாடனும்னு நினைக்கிறானுங்க. தூ.. மானம் கெட்டவனுங்க.

[ Post Comments ]

கருத்துகள் இல்லை: