வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

ஜோன் பீற்றர் விஜேந்திரன் , புலிகளினால் சில பிரமுகர்களைக் கொலை செய்வதற்காக அனுப்பி

புலிகளின் ஆயுதங்களை பாதாள உலகிற்கு விற்க உதவியவர் நீதிமன்றில் வாக்குமூலம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை பாதாள உலக கோஷ்டியினருக்கு விற்பதில் இடைத் தரகராக தொழிற்பட்ட யாசர் அரபாத் என்பவர் தானாக முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். 
குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் பேரில் சந்தேகநபரான யாசர் அரபாத் கைது செய்யப்பட்ட நிலையிலேயே அவர் வாக்குமூலத்தினை வழங்கியுள்ளார்.
வடக்கில் நறக்கமுல்லை எனும் இடத்தில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலின் போது கிடைக்கப்பெற்ற ஆவணங்களிலிருந்து ஜோன் பீற்றர் விஜேந்திரன் என்பவர் புலிகளினால் சில பிரமுகர்களைக் கொலை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டதாக தெரியவந்தது.
விஜேந்திரன் என்பவர் 145ஆம் இலக்க பேருந்தொன்றின் செலுத்துனராக வேலை செய்துள்ளார். இவரை தெமட்டகொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து பொலிஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், குறித்த சந்தேகநபர் நான்கு கொலைகளுடன் தொடர்புடையவர் என்று குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் அவருக்கு இந்தியாவிலும் குடியுரிமை உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சில கொலைகளை மேற்கொள்ளவும், பாதாள உலகக் கோஷ்டியினருக்கு விடுதலைப் புலிகள் ஆயுதங்களை விற்கவுமே தான் கொழும்பு வந்ததாக அவர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் அயுத வியாபாரத்துக்கு யாஸர் அரபாத்தின் உதவியை பெற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயங்களை நிஷாந்த சில்வா, கொழும்பு மேலதிக நீதிவான் அலெக்ஸ் ராஜாவிடம் இன்று தெரிவித்தார். இந்நிலையில், சந்தேக நபர்களை செப்டெம்பர் 8ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்க நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

கருத்துகள் இல்லை: