கிருஷ்ணகிரி அருகே ஜாதி பெயரை சொல்லி திட்டிய நான்கு பேருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிருஷ்ணகிரி அடுத்த கன்னன்டஅள்ளியை சேர்ந்தவர் டிராக்டர் டிரைவர் பொன்னுசாமி (35). இவரும் அதே பகுதியை சேர்ந்த ரவி, சீனிவாசன் ஆகியோர் கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி அன்று டிராக்டரில் மணல் ஏற்றி வந்தனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன் (38), வெங்கடசலாபதி (57), பால்ராஜ் (54), சுப்பிரமணி (48) ஆகியோர் டிராக்டரை மறித்து பொன்னுசாமியிடம் மணல் லோடுக்கு 100 ரூபாய் கேட்டுள்ளனர். அவர் கொடுக்க மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த வெங்கட்ராமன் உள்ளிட்டவர்கள், பொன்னுசாமி உள்ளிட்ட மூன்று பேரையும் அடித்து உதைத்து ஜாதி பெயரை சொல்லி திட்டியுள்ளனர். இது குறித்து பொன்னுசாமி மத்தூர் போலீஸில் புகார் செய்தார். இது குறித்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பெருமாள் விசாரித்து, ஜாதி பெயரை சொல்லி திட்டிய வெங்கட்ராமன், வெங்கடசலாபதி உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஓராண்டு சிறை தண்டனையும், தலா 2,000 ரூபாய் அபாராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இது சம்பந்தப்பட்ட சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 21 ம் நூற்றாண்டில் ஜாதி பெயரை சொல்லி திட்டுவது எப்படி தவறோ அதே போல சிறைக்கு அனுப்புவதும் தவறு. அபராதம் மட்டும் போதுமானதாகும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக