இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊழல் வேரூன்றி உள்ளது. ஸ்ரீகிருஷ்ண தேவராயர் நன்கொடை அளித்த விலைமதிப்பற்ற நகைகள் திடீரென்று மாயமாகி விட்டது. அவை எங்கே சென்றது என்று இது வரை தெரியவில்லை. மேலும், வஸ்திர அலங்கார சேவை டிக்கெட் விற்றதில் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளது.
இதில் தொடர்புடையவர்களை கண்டு பிடித்து உரிய தண்டணை அளிக்க வேண்டும் என்று நான் போராட்டம் நடத்தினேன்.
ஆனால் ஆந்திர அரசோ திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய சேர்மன் மற்றும் அதிகாரிகளை நியமித்ததோடு நின்று விட்டது. ஊழலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, திருப்பதி கோவிலில் நடக்கும் ஊழல் பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். அப்போது தான் ஊழல் பேர்வழிகள் சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள் என்று அவர் கூறினார்.
பதிவு செய்தது: 26 Aug 2010 6:07 pm
7:10 وَلَقَدْ مَكَّنَّاكُمْ فِي الْأَرْضِ وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَايِشَ ۗ قَلِيلًا مَّا تَشْكُرُونَ7:10. (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக