நித்யானந்தா மீது பொய் புகார் கூறிய லெனின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நித்யானந்தா ஆசிரமம் கூறியுள்ளது.
சிறையில் இருந்து வெளியே வந்துள்ள நித்யானந்தா, பெங்களூர் பிடதியில் உள்ள ஆசிரமத்தில் தங்கி வழக்கமான பூஜைகளை செய்து வருகிறார்.
இந்நிலையில் நித்யானந்தாவின் சீடர்கள் பெங்களூர் ராம்நகர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது முன்னாள் சீடர் லெனின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். அப்போது அங்கு போலீஸ் சூப்பிரண்டு இல்லை. இதைத் தொடர்ந்து அங்கு மனு கொடுத்து விட்டு திரும்பினார்கள்.
இது தவிர பிடதி ஆசிரமம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
நித்யானந்தா மீது பொய் புகார் கூறிய லெனின் மீது போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 2 முறை சீடர்கள் கோரிக்கை விடுத்தனர். தனிப்பட்ட முறையிலும் லெனின் மீது புகார் கொடுக்கப்பட்டது. அதில் அவர் தொடர்ந்து ஆசிரமம் பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தனர்.
மீண்டும் ஆர்ப்பாட்டம் நடந்தபோது போலீஸ் சூப்பிரண்டு இது பற்றி பிடதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுமாறு கூறினார் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக